நமக்கு எப்பொழுதும் இலாபம் தரக்கூடிய ஒரு தொழில் தான் கால்நடை (Livestock) வளர்ப்புத் தொழில். இந்தத் தொழிலில் சிறந்து விளங்க கால்நடைகளை முறையாகப் பராமரிப்பது (Maintenance) மிக மிக அவசியமான ஒன்று. நோய்கள் கால்நடைகளைத் தாக்காமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. ஒரு வேளை நோய்த் தாக்குதல் தென்பட்டால் முறையான சிகிச்சையை தரமாக அளிக்க வேண்டும். அந்த வகையில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான சிறந்த தீர்வுகளை இங்கு காண்போம்.
மூலிகை மருந்துப் பயன்பாடு:
ஆடுகளுக்கு உடல் நலமில்லாத போது தரப்படும் மருந்துகள் அவற்றை குணப்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. அவற்றின் பாலிலும் இறைச்சியிலும் கலந்து விடுகிறது. இயற்கையாக கிடைக்கும் மூலிகை (Herb) மருந்து பொருட்களை கொடுத்தால் அவற்றின் பால், இறைச்சியில் வெளியேறுவதில்லை. ஆடுகளுக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டால், இயற்கையாக கிடைக்கும் சில மூலிகைகளைக் கொண்டு மிக எளிதில் குணப்படுத்தி விடலாம். இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தும் போது, எந்தவித பக்க விளைவுகளும் (Side effects) ஆடுகளுக்கு ஏற்படாது.
குடற்புழு நீக்க வழிமுறை:
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கமே முதல் பிரச்னை. தாமிரச்சத்து குறைவாக உள்ள ஆடுகளில் குடற்புழு பாதிப்பு அதிகமாக இருக்கும். இவை ஆட்டின் எடை (Weight) கூடுதலை தருகிறது.
சினை ஆடுகள், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு பூண்டு, கொத்தமல்லி தழை வேப்பிலை (Neem) சேர்த்து கொடுத்தால் குடற்புழு தொல்லை நீங்கும். கிடா ஆட்டுக்கு வேப்பிலை தரக்கூடாது. சிறிது கற்றாழைச் சாறு சேர்த்து கொடுக்கலாம். அல்லது நான்கு கரண்டி அளவு விளக்கெண்ணெய் தரலாம். எலுமிச்சை விதைகளை தேன் கலந்து ஒரு கரண்டி அளவுக்கு கொடுத்தால் பயன்தரும். வாதுமை கொட்டை இலைகளை இரு கையளவு எடுத்து கசாயமாக்கி தேனில் கலந்து தரலாம். மல்பெரி செடியின் பழங்கள் கையளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தால் குடற்புழுக்கள் ஒழியும்.
மேலும் தகவலுக்கு:
ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்பு துறை
திண்டுக்கல்,
94864 69044.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பசுக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசு அறிவியல் தேர்வு