ஒருங்கிணைந்த விவசாயத்தில் பெரும்பாலானோர் கோழிகள் வளர்ப்பதில் மிகந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார்கள். குறைந்த நேர பராமரிப்பு போதும். இவைகளுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க அதிக செலவில்லாமல் இயற்கை முறையிலேயே தீர்வு காணலாம். கோழிகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் மற்றும் மூலிகை மருந்துகள் பற்றி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு
- சின்ன வெங்காயத்துடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து, இடித்து அவ்வபோது கோழிகளுக்கு கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கும்.
- கோழிக்குஞ்சுகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க அவைகளுக்கு வைக்கின்ற தண்ணீரில் சிறிது வசம்பை கலந்து வைக்க வேண்டும்.
ரத்தக்கழிச்சலுக்கு
மணத்தக்காளி கீரை வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.எனவே கோழிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் இரத்த கழிச்சல் நோய் வரவே வராது.
சளி பிடிக்காமல் இருக்க
காலநிலை மாறும் போது கோழிகளுக்கு சளி பிடிக்கும். குறிப்பாக குளிர்காலங்களில் குடிக்கும் தண்ணீரில் அதிமதுரம் பொடியை கலந்து கொடுத்தால் எளிதில் இதிலிருந்து விடுபடும்.
குடற்புழுவை நீக்க
வெள்ளைப்பூசணியை கோழிகளுக்கு கொடுக்கும் தீவனத்தோடு கலந்து கொடுத்தால் குடற்புழுகள் குறைந்துவிடும்.
Anitha Jegadeesan
Krishi Jagran