தயாரிப்பு முறை
இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. உதாரணமாக : சுரக்காய், அதிமதுரம், வேப்பங் கொட்டை மற்றும் பட்டை மற்றும் நிறமி, பதப்படுத்துதல் போன்றவைகளுக்காகவும் சில வகையான உப்பு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பயன்படுத்தும் முறை
ஒவ்வொரு பூச்சிகளுக்கும், இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்த வேண்டும். முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஸ்பிரே செய்யும் தொழில்நுட்பமே சிறந்த பொருளாதார பலனளிக்கும். (இவை பெரிய பண்ணைகளுக்கும் பொருந்தும்).
தெள்ளுப் பூச்சிக்கு – 1 மி.லி Dr.Fly, 7 மி.லி தண்ணீர்.
ஈக்கள் – 1 மி.லி Dr.Fly,10 மி.லி தண்ணீர்.
கால்நடைகள் மீது ஸ்பிரே செய்யும் பொழுது 1 பங்கு Dr.Flyக்கு 7 பங்கு தண்ணீரும், தரை துடைப்பதற்கு 1 பங்கு Dr.Flyக்கு 10 பங்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும்.
மேலும், தினந்தோறும் அல்லது அடிக்கடி சுத்தம் செய்யும் இடங்களில் உதாரணமாக ஹோட்டல் போன்ற இடங்களில் 10 மி.லி Dr.Flyக்கு 300 மி.லி தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இடங்களில் ஸ்பிரே செய்தால் 1 வாரம் வரை இதன் பயன் இருக்கும். உதாரணமாக, கால்நடைப் பண்ணைகளில் தரையைத் தினந்தோறும் சுத்தம் செய்வோம், ஆனால் அதன் சுவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வோம். இதுபோன்ற இடங்களில் ஸ்பிரே செய்யலாம். இந்த முறையை பயன்படுத்துவதால் பூச்சிகள் உடனடியாகக் கொல்லப்படுகின்றன.
முக்கிய கவனத்திற்கு
வேதிப் பொருட்கள் பயன்படுத்திய இடங்களில் வேலை செய்வதில்லை.
முன்பு பயன்படுத்தியிருந்தால் தண்ணீரில் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே இதனைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொறு முறையும் பயன்படுத்திய பின்பும் குப்பியை நன்கு மூடி வைக்க வேண்டும். திறந்து வைப்பதனால் பூஞ்சாணம் உருவாகி கெட்டுப்போய்விடுகின்றது.
பயன்கள்
கரப்பான் பூச்சி, ஈ. உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி போன்றவைகள் மீது தெளித்தாலோ அல்லது தெளிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாலோ பூச்சிகள் இறந்துவிடுகின்றன.
தொடர்ந்து பயன்படுத்துவதால் கால்நடைகளுக்கு எந்தத் தொற்று நோயும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் கால்நடைகளைத் தாக்கும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.
வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள், வாத்துகள் போன்றவைகளுக்கும் பயன்படுத்தலாம்.