Animal Husbandry

Thursday, 22 October 2020 08:59 AM , by: Elavarse Sivakumar

மாடுகள் குட்டிகளை ஈன்று அவற்றின் இனத்தைப் பெருக்குவதே, அதனை வளர்ப்பவர்களுக்கும், மாட்டிற்கும் நல்லது. ஆகப் பருவத்துக்குவந்தும் மாடுகள் சினைபிடிக்காமை என்பது சில மாடுகளில் தீராதப் பிரச்னையாக உள்ளது. இதனை இயற்கையான மருந்து மூலமே குணப்படுத்த முடியும்.

இயற்கை மருந்து (Natural Medicine)

தேவையான பொருட்கள் (Ingredients)

  • முள்ளங்கி

  • சோற்றுக்கற்றாழை

  • பிரண்டை

  • முருங்கை

  • கருவேப்பிலை

  • உப்பு

  • வெல்லம்

பயன்படுத்தும் முறை (How to use)

பருவத்துக்கு வந்த முதல் அல்லது இரண்டாவது நாளில் இருந்து சிகிச்சையைத் தொடங்கவும்.

நாளுக்கு ஒருமுறை வெல்லம் மற்றும் உப்புடன் புதிதாகப் பறித்த கீழ்க்கண்டவற்றை கீழே கொடுத்துள்ள வரிசைப்படி வாய்வழியாய் கொடுக்கவும்

  • தினமும் 1 வெள்ளைமுள்ளங்கி 5 நாட்களுக்கு

  • தினமும் 1 சோற்றுக் கற்றாழைமடல் 4 நாட்களுக்கு

  • 4 கையளவு முருங்கை இலை 4 நாட்களுக்கு

  • 4 கையளவுபிரண்டைதண்டு 4 நாட்களுக்கு

  • 4 கையளவு கருவேப்பிலையை மஞ்சளுடன்சேர்த்து 4 நாட்களுக்கு

இதனை தொடர்ந்து கொடுத்துவர மாடுகளில் சினைப்பிடித்தல் பிரச்னை படிப்படியாகத் தீரும்.

மேலும் படிக்க...

மாடுகளின் மடிநோய்க்கு மகத்தான மருந்து- தயாரிப்பது எப்படி?

மாடுகளை வெளிப்புற ஒட்டுண்ணியின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)