தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் மீன்வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
ஆன்லைனில் பயிற்சி (Training online)
ஆன்லையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், விருப்பமுள்ள விவசாயிகள் உள்ளிட்டோர் சேர்ந்து பயனடையலாம். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கூழ்ம தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஒரு நாள் பயிற்சி வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைன் மூலம் நடக்கிறது.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் (Special features of the training)
இந்தப் பயிற்சியில்
-
உயிர் கூழ்ம திறன் என்றால் என்ன,
-
அதன் முக்கியத்துவம்,
-
தொழில்நுட்பத்துக்கு ஏற்ற நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள்
-
பயன்பாடுகள்
-
செயல்திறன்
-
எதிர் கொள்ளும் சவால்கள்
-
பொருளாதார மேலாண்மை
ஆகிய தலைப்புகளில் இணையதளம் வழியிலான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
22க்குள் முன்பதிவு (Booking within 22th April)
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் வருகிற 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!