கறவை மாடு பண்ணையாளர்களுக்குப் பசுந்தீவன உற்பத்தி முறைகள் குறித்த இணையவழி பயிற்சி நாமக்கல்லில் நடைபெற உள்ளது.
ஆன்லைனில் பயிற்சி (Training online)
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் இன்று கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி முறைகள், ஊறுகாய் புல் (சைலேஜ்) தயாரிக்கும் முறைகள் மற்றும் அசோலா உற்பத்தி முறைகள் " என்ற தலைப்பில் இணைய வழி பயிற்சி (Zoom Meeting (Online)) முறையில் நடைபெற உள்ளது.
விஞ்ஞானிகள் விளக்கம் (Scientists explain)
இப்பயிற்சியில் பசுந்ததீவனப் புற்களின் வகைகள், புல் வகை தீவனபுல், தானிய வகை தீவனப்புல், பயறுவகை தீவனப்புல், மரவகை தீவனப்புல், 10 செண்ட் நிலப்பரப்பில் தீவன வங்கி அமைத்தல் குறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் முனைவர் ப. முருகன் விளக்குகிறார்.
இதேபோல் ஊறுகாய் புல் (சைலேஜ்) தயாரிக்கும் முறைகள் குறித்து காட்டுப்பாக்கம், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம். சுகந்தி எடுத்துரைக்கிறார்.
இதேபோல், அசோலா உற்பத்தி முறைகள் குறித்து, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் முனைவர் மா. டெய்சி விளக்குகிறார்.
ஆகையால் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெறும் நாள் (The day of the event)
15.06.21 (இன்று)
நேரம் (Time)
காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை
லிங்க் (Link)
கீழே உள்ள Zoom Meeting linkயை பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.
https://zoom.us/j/9881221127?pwd=OHp1dUhnbTNvZklnOEk4REhPZjF1dz09
Meeting id: 9881221127
Passcode: 123456
தொடர்புக்கு (For Contact)
கூடுதல் விபரங்களுக்கு 9600520698 என்ற கைப்பேசியைத் தொடர்பு கொள்ளவும்.
எனவே கால்நடை விவசாயிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறாக்ரள்.
மேலும் படிக்க...
கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!