பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கேரளாவில் 55,000 வாத்துக்களை அதிரடியாகக் கொன்றுவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் (Omicron)
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரள மாநிலம் கடுமையாகப் போராடி வருகிறது. அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், பாதிப்புக் கட்டுப்பாட்டில் இல்லை. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் தாக்குதலும் உறுதியாகியிருக்கிறது.
பறவைக் காய்ச்சல் (Bird flu)
மனிதர்களைப் பதம்பார்க்கும் வைரஸ் ஒருபுறம் என்றால், பறவைகளைப் பலிவாங்கும் பறவைக்காய்ச்சல் மறுபுறம் வேட்டையாடத் தொடங்கிவிட்டது.
கொல்ல உத்தரவு (Order to kill)
அதாவது, கடந்த சில வாரங்களாக பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. குறிப்பாக இரு மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள இரு மாவட்டங்களில் சுமார் 55,000 வாத்துகளை கொல்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்புக் குழுக்கள் (Special groups)
இதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆலப்புழாவில் உள்ள 19 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட பகுதிகளில் வாத்து, கோழி, காடை இறைச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இறைச்சிப்பிரியர்களுக்கு அதிர்ச்சி (Shock to meat lovers)
அதுமட்டுமின்றி இறைச்சி கடைகளில் வாத்து, கோழி மற்றும் காடை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
ரூ.15.6 லட்சத்திற்கு ஏலம் போன மிக அரிதான ஆடு!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!