மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 June, 2019 5:41 PM IST

கால்நடை வளர்ப்பு என்பது நமது நாட்டில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஆடு, மாடு, கோழி  போன்றவை வளர்த்து வந்தனர். அவைகள் அனைத்தும் வீடுகளில் செல்ல பிராணிகளாகவும், அதன் கழிவுகள் உரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

கால போக்கில் இவ்வனைத்தும் பண்ணைகள் அமைத்து வியாபார நோக்கத்திற்காக வர வளர்க்க ஆரம்பித்து விட்டனர். வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் பட்டியலில் இன்று முயல், பன்றி ஆகியன சேர்க்கப்பட்டு விட்டன.

பெருகிவரும் மக்கள் தொகையும்,  இறைச்சி பிரியர்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் கால்நடை பண்ணைகள் அதிக அளவில் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சி அடுத்த படியாக பன்றி இறைச்சி விரும்ப பட்டு வருகிறது.

இறைச்சி உற்பத்தி மட்டுமல்லாமல், எருவும் உரமாக பயன் தருகிறது. பன்றி வளா்ப்பினால் ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.

பன்றி வளர்ப்பு மற்றும் மேலாண்மை முறைகள்

பன்றி வளர்ப்பு  பண்ணை என்பது இரு வகை படும். இறைச்சிக்கான பன்றி பண்ணை, இனப்பெருக்கத்துக்கான பன்றி  பண்ணை என  இரண்டு வகை படும்.  எந்த மாதிரியான பண்ணையைத் தொடங்கினாலும் அதிக லாபம் பெறலாம்.

பன்றிக்குடில் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை

  • குடில் அமைப்பதற்கு சற்று உயரமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • மழைக்காலத்தில் மற்றும் இதர காலங்களில் நிலத்தில் அதிக அளவில் நீர்தேங்காத இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • தரைப்பகுதி திடமாக, வழுக்காதவாறு, சரிவாகவும், எளிதில் நீர் வெளியேறுமாறு இருக்க வேண்டும்.
  • குடிலின் பக்கச்சுவர்கள் 4-5 அடியிலும், மீதமுள்ள உயரத்திற்கு இரும்பு குழாய்கள் (அ) மரக்குச்சிகள் கொண்டு அமைக்க வேண்டும்.
  • குடிலின் சுவர்களில் மழை உள்ளே கசியாதவாறு அமைத்தல் வேண்டும்.
  • குடிலின் உள்ளே அறைகள் 8-10 அடி உயரத்துடன் இருக்க வேண்டும்.
  • நல்லகாற்றோட்டமாக, வெளிச்சத்துடன் இருக்கம் படி அமைக்க  வேண்டும்.
  • உண்ணும் கலனுக்கான இடம் 6-12 இந்த அளவுடன் இருக்க வேண்டும்.
  • எளிதாக சுத்தம் செய்வதற்காக உண்ணும் கலனின் மூலைகள், வடிகால் பகுதி, சுவர்களின் மூலைகள் மொழுமொழுப்பாக இருக்க வேண்டும்.
  • அதிக அளவு பன்றிகளை ஒரே இடத்தில அடைத்து வைக்காமல் போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும்.
  • காலநிலைக்கு ஏற்ப உணவுகளை கொடுக்க வேண்டும். கோடைக்காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் தருவது அடிப்படையாகும்
  • பன்றிகளின் கழிவுகளை அவ்வப்போது அப்புறபடுத்தி சுத்தம் செய்ய வேண்டும்
  • ஆண்பன்றி /பால்தரும் பெண்பன்றிக்கு என தனித்தனியே குடில் ஒதுக்கி தர வேண்டும்.

இனவிருத்திக்கான பன்றியை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்

  • கால்நடை பண்ணைகளை அணுகி ஆலோசனை பெறுவது சால சிறந்தது.
  • கால்நடை பண்ணைகளில் நமது தேவையினை அறிந்தது அதற்கேற்றவாறு நல்ல தரமான பன்றி இனத்தை வாங்க வேண்டும்.
  • வர்த்தக முறையில் பன்றி வளர்ப்பு செய்வதாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள கலப்பு இனம் (அ) வெளிநாட்டு இனத்தை வாங்கலாம்.
  • இனவிருத்தி செய்யும் நிலையில் உள்ள பன்றிகளை வாங்குவதால் உடனடி லாபம் எதிர் பார்க்கலாம்.
  • புதிதாக வாங்கிய பன்றிகளை மற்ற பன்றிகளுடன் குடிலில் இடும் முன்பு ஏதேனும் அடையாளக் குறியீட்டை இட வேண்டும்.
  • சரியான கால இடைவெளியில் நோய் தடுப்பூசி போடுதல் அவசியமாகும்.
  • புதிதாக வாங்கிய பன்றிகளை முதல் 2 வாரங்களுக்கு நேரடி கண்காணிப்பில் வைத்திருந்து, பின் மற்ற பன்றிகளுடன் கலந்து விட வேண்டும்.
  • பரிந்துரைகளின் படி பன்றிகளை குடிலில் இட வேண்டும், ஒரே குடிலில் அதிகமான பன்றிகளை இடுவது சட்டத்திற்கு எதிரானது.
  • வியாபார நோக்கத்திற்காக வாங்கும் போது மூன்று மாத இடைவெளி விட்டு 2 பிரிவுகளாக பன்றிகளை வாங்கவும்.
  • முதிர்ந்த பன்றிகளை தரப்பகுப்பு செய்யது தவிர்ப்பது நல்லது.
  • 10-12 முறைக்கு அதிகமாக இனப்பெருக்கம் செய்து குட்டிகள் ஈன்ற முதிர்ந்த பன்றிகளை நீக்க வேண்டும்.

பன்றிகளுக்கான தீவன மேலாண்மை யுக்திகள்

  • பன்றிகளுக்கு சிறந்ததீவனத்தை தர வேண்டும்.
  • அடர்தீ வனங்களை குறிப்பிட்டசமயங்களில் மட்டுமே தரலாம்.
  • வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை கால்நடை மருத்துவரின் பரிந்துரையின் படி தர வேண்டும்.
  • போதுமான அளவு சுத்தமான நீரை தர வேண்டும், வெயில் காலங்களில் கூடுதலாக கொடுக்க வேண்டும்.
  • பன்றிகளுக்கு போதுமான அளவு ஏதேனும் பயிற்சிகளைத் தருவது நல்லது.
  • கருவுற்றிருக்கும் காலங்களில் பெண்பன்றிகளுக்கு அதிக ஊட்டச்சத்துள்ள தீவனங்களைத் தர வேண்டும்.
  • பெண்பன்றிகளுக்கு கொடுக்கபடும் உணவின் அளவு அதன் வயது, எடை, போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.
  • சமையல்அறை கழிவுகள் /உணவு விடுதி கழிவுகள்/குளிர்பதன சேமிப்பு கழிவுகள்/சேமிப்புக் கிடங்கிலிருந்து வரும் கழிவை தீவனமாகப் பயன்படுத்தலாம்.

நோய் அறிகுறி மற்றும் தீர்க்கும் வழிகள்

  • குறைந்த அளவு உணவு உட் கொள்ளுதல், சோர்வுடன் காணப்படுதல், காய்ச்சல், வழக்கத்திற்கு மாறுபட்ட நடவடிக்கை போன்றவைகள் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
  • நோய் அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
  • ஏதேனும் பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்பட்டால்,மற்ற பன்றிகளிடமிருந்து தனித்து வைக்க வேண்டும்.
  • பன்றிகளுக்கு அஜீரணம் போன்றவை வராமல் முறையான இடைவெளியில் வயிறு சுத்தம் செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.
  • உடல் சுத்தம் மிக முக்கியமான ஒன்று, எனவே அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட படி அணைத்து வகையான தடுப்பூசி மற்றும் மருந்துகளை கொடுக்க வேண்டும்.

சினைக்காலம் 

பொதுவாக பன்றிகளின்  சினைக்காலம் 110 நாட்களாகும். ஆண்டுக்கு இரு முறை குட்டிகளை ஈனும். ஒவ்வொரு முறையும் குட்டிகள் ஈனும் போது 8 முதல் 12 குட்டிகள் வரை ஈனும்.  

கர்ப்பக்காலதில் கவனிக்கும் முறைகள்

கருவுற்றிருக்கும் சமயங்களில் அமைதியான நல்ல காற்றோட்டமான சூழலை அமைத்து தர வேண்டும். கருவுற்று குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன்பு  உள்ள சமயத்தில்  பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு  பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பன்றிக்குட்டிகளைக் பேணுதல்

  • புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளை மிக அதிகக் கவனத்துடன் கையாள வேண்டும்.
  • நஞ்சுக்கொடியை அறுத்த நொடியில் அயோடின் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.
  • முதல் 6-8 வாரங்களுக்குத் தாய்பால் தர அனுமதிக்க வேண்டும்.
  • முதல் 2 மாதங்கள் இருக்கும் போது கவனத்துடன் பன்றிக்குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • பிறந்தவுடன் தோன்றும் ஊசிப் போன்ற பற்களை எடுத்து விட வேண்டும்.
  • கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளைப் முறையாக வேண்டும்.
  • குட்டிகளுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அடங்கிய உணவை அதிக அளவில் தர வேண்டும்.
  • ஆண் பன்றிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்யாமல், இறைச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், 3-4 வாரங்களில் விறைநீக்கம் செய்ய வேண்டும்.
  • பால் தரும் பெண் பன்றிக்கு கூடுதலாக உணவு தர வேண்டும்.

பன்றிகளை சந்தைப்படுத்தும் முறைகள்

எல்லா விதமான  பன்றிகளை சந்தைப்படுத்த இயலும். இனவிருத்தி செய்யப் பயன்படுத்தும் பன்றிக்குட்டிகள், இறைச்சிக்காக கொழுப்பு நிறைந்த பன்றிகள், முதிர்ந்த பன்றிகள் என பலவகை படுத்தலாம். 2-3 மாதங்களுடைய பன்றிக் குட்டிகளை விற்பதன் மூலம் வெகு விரைவில் அதிக லாபம் அடையலாம்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Piggery Farming: Good Startup Less Investment And More Profit: Glance Of Benefits And Its Management
Published on: 14 June 2019, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now