பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 June, 2021 6:48 AM IST

விவசாயிகளும், தொழில் முனைவோரும் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் சேர்ந்துப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

40 பயனாளிகள் ஒதுக்கீடு (Allocation of 40 beneficiaries)

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2020-21 மூலம் 1000 நாட்டுக்கோழிகள் வளர்க்க ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 5 பயனாளிகள் வீதம் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 40 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.

முதல் தவணை (First installment)

இதில் முதல் தவணையாக 20 பயனாளிகள் (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 பயனாளிகளுக்கு மிகாமல்) தேர்வு செய்யப்பட்டனர்.

20 பேர் தேர்வு (20 people selected)

தற்போது இரண்டாவது தவணை யாக மீதமுள்ள 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 20 பயனாளிகளில் 11 பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் (Key features of the project)

  • பயனாளி 1000 எண்ணிக்கை பாலினம் பிரிக்கப்படாத இரட்டைப் பயன் (இறைச்சி/முட்டை) நாட்டுக் கோழிக் குஞ்சுகளை, ரூ.30,000/-க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானிய மாக ரூ.15,000/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

  • பயனாளி 1500 கிலோ கோழித் தீவனத்தை, ரூ.45,000க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்னேற்பு மானியமாக 22,500 ரூபாய் பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

  • பயனாளி ரூ75,000 மதிப்புள்ளக் குஞ்சுப்பொறிப்பானைக் கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானியமாக ரூ.37,500 பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

  • ஒவ்வொரு பயனாளியும், சேவல்களை 16 வாரங்கள் வரையிலும், முட்டைக்கோழிகளை 72 வாரங்கள் வரையிலும் வளர்க்க வேண்டும்.

  • சேவல்கள், கோழி முட்டைகள், கருவுற்ற முட்டைகள், கழிக்கப்பட்டக் கோழிகள் மற்றும் கோழிக்கழிவு உரம் முதலியன விற்பனை செய்வதன் மூலம் பயனாளிகள் வருமானம் பெற்றுப் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 தகுதிகள் (Qualifications)

  • 1000 கோழிகள் பராமரிப்புக்குச் சொந்தமான குறைந்தபட்சம் 2000 முதல் 2500 சதுர அடி கோழிக்கொட்டகை மற்றும் பகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

  • கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் ஆர்வம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

  • அதே கிராமத்தில் நிரந்திரமானக் குடியிருக்கும் பண்ணையாளராக இருத்தல் அவசியம்.

  • விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்படுவர்.

  • 2021 முதல் 2017 வரையிலானக் கோழி அபிவிருத்தித் திட்டம் மற்றும் 2018-19ம் ஆண்டின் தொழில்நுட்ப கோழி வளர்ப்பு திட்டப் பயனாளிகளாக இருக்கக் கூடாது.

  • 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க வேண்டும்.

விண்ணப்பம் (Application)

மேற்கண்ட தகுதிகள் இருப்பின் விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தினை அருகிலுள்ள கால்நடை மருந்தகக் கால்நடை உதவி மருத்துவரிடம் வழங்க வேண்டும்.

தொடர்புக்கு (Contact)

மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறை, தர்மபுரி, உதவி இயக்குநர் அலுவல கங்கள் தர்மபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன் பெறலாம்.

தகவல்

ச.சிவ்யகர்சினி

மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க..

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா- விஜயகாந்த் கூற்று

English Summary: Poultry Breeding Project - Invitation to join!
Published on: 29 June 2021, 10:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now