Animal Husbandry

Thursday, 13 June 2019 05:15 PM

பறவை வளர்ப்பு என்பது வளர்க்கப்பட்ட கோழி, காடை, வான்கோழி, வாத்து போன்ற பறவைகளின் இனப்பெருக்கம் செய்து அதனை இறைச்சிகளை, முட்டைகளையும் உணவுக்குக்காக விற்பனை செய்வது முக்கிய காரணமாகும். இதில் முக்கியமாக கோழிகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

கோழி இனங்கள்

கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.        

1) அமெரிக்க கோழி இனங்கள்

2) ஆசிய கோழி இனங்கள்

3) ஆங்கில கோழி இனங்கள்

4) மத்திய கோழி இனங்கள்

இந்தியாவில் நான்கு தூய கோழியினங்கள் உள்ளன

1) அசீல்

2) கடக்நாத்

3) பர்சா 

4) சிட்டகாங்

அசீல்

1) அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை.

2) அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகளாவன, பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும் சிவப்பு), நியூரி (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கருப்பில் வெள்ளை நிறப் பொட்டுகள்), ஜாவா (கருப்பு), சப்ஜா (வெள்ளை மற்றும் தங்க நிறம் அல்லது கருப்பு கலந்த மஞ்சள் நிறம் அல்லது வெள்ளி), டீகார் (பழுப்பு), ரேசா (இளஞ்சிவப்பு), பீ கோம்ப் எனும் கொண்டை அமைப்பு, நல்ல சிவப்பு நிறமுடைய தாடி மற்றும் காது மடல்கள், நீண்ட கழுத்து, பலமான கால்கள்.

கடக்நாத்

1) கடக்நாத் கோழியினத்தின் தோல், அலகு, தாடி, கால் விரல்கள் மற்றும் பாதம், போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.

2) இக்கோழியினத்தின் கொண்டை, தாடி, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

3) இந்த கோழியினத்தின் உட்புற உறுப்புகள் அடர் கருப்பு நிறத்திலும், அதன் தசைகள், தசை நார்கள், நரம்புகள், மூளை கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிறம் மெலனின் நிறமி கலந்திருப்பதால் கருப்பு நிறம் இருக்கும்.

பர்சா

1) பர்சா இனம் நடுத்தர உடல் வாகுடைய, இலகுவான எடையுடைய, எப்போதும் கவனுத்துடன் உஷாராக இருக்கும்.

2) இவற்றின் முட்டையிடும் திறன் குறைவு.

3) இவற்றின் தோல் நிறம் வேறுபடும்.

சிட்டகாங்

1) சிட்டகாங் கோழியினம் மலாய் என்றும் அறியப்படும்.

2) இந்த கோழியினம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது.

3) சிட்டகாங் இனத்தின் பிரபல வகைகளாவன, பஃப், வெள்ளை, கருப்பு, அடர்ந்த பழுப்பு, சாம்பல் நிறம்.

4) பீ கொண்டை, சிவப்பு காது மடல்கள், நீண்டு தொங்கும் கண் இமைகள், இறகுகள் அற்ற கொண்டைகள்.

கலப்பின கோழியினங்கள்

இந்த கோழியினங்கள் பல்வேறு விதமான தூய கோழினங்களை இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை கலப்பினம் செய்து உருவாக்கப்படுகின்றன. இவை வணிக ரீதியாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றின் முட்டையிடும் மற்றும் வளரும் திறன் அதிகம். இவற்றின் கலப்பின வீரியம் அதிகம்.

1)  முட்டைக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :

பிவி 300, ஐஎஸ்எ பாப்காக், போவன்ஸ், யூரிபிரீட், ஹைலைன், டெகால்ப், லோமேன், கீஸ்டோன், எச் & என் நிக் சிக் போன்றவை.

2)  இறைச்சிக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :

காப், ராஸ், ஹப்ரோ, ஹப்பார்ட், ஸ்டார்புரோ,ஏவியன் 34, அனாக் 2000, ஆர்பர் அக்ர்ஸ், ஹப் சிக்ஸ், பீட்டர்சன் போன்ற இதர இனங்கள்

வளரும் பருவக் கோழிகள்

முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.

முட்டையிடும் கோழிகள்

முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.

இடஅமைப்பு

1) கோழியும், தீவனமும் எளிதில் கிடைக்கக்கூடிய இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.

2) மின்சார வசதி கிடைக்குமாறு இருக்கவேண்டும்.

3) மழைக்காலங்களில் நீர்த் தேங்காமல் விரைவில் வடியக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.

4) குடி தண்ணீர் தாராளமாகக் கிடைக்கவேண்டும்.

5) நல்ல சந்தை சற்று தொலைவிற்குள் இருக்கவேண்டும். அதாவது சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கவேண்டும்.

கோழிப்பண்ணை மேலாண்மை

1) அடைக்காக்கும் வீடு

2) சுகாதாரம்

3) கூளங்கள்

4) அடைகாப்பு வெப்பநிலை

5) அடைக்காப்பான் இடவசதி

6) அடைக்காப்பான் தடுப்பு

7) தரை இடஅளவு

8) நீர்த்தொட்டி அமைக்கும் இடைவெளி

மற்ற பறவை இனங்கள்

1) காடை

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளரும். டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.

இனங்கள்

> நியூசிலாந்து காடை

> பாப் வெள்ளைக் காடை

> சைனாக் காடை

> மடகாஸ்கர் காடை

> கலிபோர்னியா காடை

> நியூகினியா காடை

> ஜப்பானிய காடை

இதில் நம் நாட்டில் முக்கியமாக வளர்க்கப்படுவது ஜப்பானிய கடை. இது இறைச்சிக்காக  அதிகம் வளர்க்கப்படுகின்றன. இதற்கான வளர்ப்பு முறை இரண்டு வகைப்படும்:

1) ஆழ்கூள முறை

2) கூண்டு முறை

இனப்பெருக்கம்

காடைகள் 7 வார வயதில்  முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

குஞ்சு பராமரிப்பு

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான்  இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப்  புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்ிகன் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

2) வான்கோழி

இனங்கள்

1) அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்:

> இவ்வவை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை.

> இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும் , பெட்டடைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடியவை.

2) அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி

> இவ்வகை வான்கோழி  கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும்.

> ஆண் கோழிகள் 12 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 முதல் 9 கிலோ எடை வரையும் இருக்கும்.

3) பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை

> அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப்பட்டன.

> உடல் எடையில் சிறியதாக இருக்கும்.

வளர்ப்பு முறைகள்:

1. புறக்கடை வளர்ப்பு(Backyard system)

2. மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)

3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)

4. கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

வான்கோழித் தீவனப் பராமரிப்பு

வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும்.

- தண்ணீர்

- மாவுப்பொருள்

- புரதம்

- கொழுப்பு

- நார்ப்பொருள்

- தாது உப்புக்கள்

- உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)

இனப்பெருக்கம்

> செயற்கை முறைக் கருவூட்டல்

3) வாத்து

அன்னப்பறவை, பெருவாத்து, சிறு வாத்து என பல வகை இக்குடும்பத்தினுள் அடக்கம். எனினும் சிறுவாத்துகளையே பொதுவாக வளர்ப்பது வழக்கம். இவை நல்ல நீரிலும், உப்புகொண்ட கடல்நீரிலும் கூட வாழக்கூடியவை.

இனங்கள்

1) காக்கி கேம்பெல்

> இவ்வகை லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்ட்டவை.

> ஒரு முட்டை சுழற்சியில் 300 முட்டைகள் வரை தரக்கூடிய இனங்கள்.

> முட்டை உற்பத்திக்காக இவ்வகை இனம் வளர்க்கப்படுகின்றன.

2) வெள்ளை பெக்கின்.

> வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வினம் இந்தியச் சூழ்நிலைக்கு மிகவும் ஏற்பது.

> விரைவில் வளரும் தன்மை கொண்டது.

> இவ்வகை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை.

கொட்டகை அமைப்பு

வாத்துகளுக்கு கொட்டகை பெரிய அளவில் தேவைப்படாது. நல்ல காற்றோட்டத்துடனும், எலித்தொல்லைகள் இன்றி இருத்தல் வேண்டும். கூரை கூடாரமாகவோ, அரை வட்டமாகவோ இருக்கலாம். தரை சாதாரணமாகவோ உலோகக் கம்பிகளாலோ அமைக்கப்பட்டிருக்கலாம். மித தீவிர வளர்ப்பு முறையில் திறந்தவெளி அமைப்பை ஒட்டியே கொட்டகை இருக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களின் போதும், பகல்நேரங்களிலும் பறவைகளை வெளியில் அனுமதிக்க எளிதாக இருக்கும். இரவு கொட்டகைக்கும் திறந்த வெளிக்கும் உள்ள விகிதம் 1/4 : 3/4 என்றவாறு இருக்க வேண்டும். முறையான வடிகால் வசதி அமைக்கப்படுதல் வேண்டும். 50 செ.மீ அளவில் அகலமும் 15-20 செ.மீ ஆழமும் கொண்ட தொடர்ச்சியான நீர்க்கால்வாய் அமைக்க வேண்டும். இரவில் தங்கும் கொட்டகை அமைப்பிற்கு இருபுறமும் இதுபோன்ற கால்வாய்கள் வடிகாலுக்காக அமைக்கப்பட வேண்டும்.

நீர் மேலாண்மை 

வாத்துகளுக்கு நீர்த்தேவை அதிகமாக இருப்பினும் அவை நீந்துமளவிற்கு நீர் அவசியம் இல்லை. நீர்த்தொட்டிகளில் வாத்துகள் தமது அகன்ற அலகை முழுதும் நனைக்குமாறு நீர் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். சரியாக தண்ணீர் அளிக்கப்படாவிடில் வாத்தின் கண்கள் சிவந்து, செதில் செதிலாகக் காணப்படும். தீவிர நிலையில் கண்கள் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு. அதேநேரம் அவ்வப்போது தண்ணீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தித் தூய்மையாக வைக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் வாத்துகளில் ஏழாவது வாரத்தில் உடல்எடை அளவு கூடும். ஆனால் முட்டையிடும் வாத்துகளில் இவ்வாறு எடை அதிகரிப்பு 0.3% மேல் இருக்கக் கூடாது.

தீவனப் பராமரிப்பு

வாத்துகளுக்கு அரைக்கப்பட்ட அல்லது உருளை மற்றும் குச்சித்தீவனங்களை அளிக்கலாம். விழுங்குவதற்கும் கடினமாக இருப்பதால் வாத்துகள் ஈரப்பதமுள்ள உணவையே விரும்பி உண்ணும். உருளைத் தீவனங்கள் சற்று விலை அதிகமாக இருப்பினும், வீணாவதைக் குறைக்கலாம், குறைந்த அளவே போதுமானது, ஆட்கூலி குறைவு, பராமரிப்பு எளிதானது. எனவே உருளைத் தீவனங்களே சிறந்தவையாகும். வாத்துகளுக்கு நார்த்தீவனம் மிகவும் ஏற்றது. குளங்கள், பச்சைத் தீவனங்களையும் பயன்படுத்தினால் தீவினச் செலவைக் குறைக்கலாம்.

k.sakthipriya

krishi jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)