நாட்டுக்கோழி விலை சரிந்திருப்பதால், கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விலை வீழ்ச்சி (price decrease)
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில், கொரோனா பரவலுக்கு முன்பு, நாட்டுக்கோழி கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.
நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity
அதிலும் குறிப்பாக கொரோனோ நெருக்கடி ஆரம்பித்த காலகட்டத்தில், நாட்டுக்கோழியைச் சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் இருந்தது.
ரு.700 வரை (Up to Rs.700)
எனவே பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நாட்டுக்கோழிகளை வாங்கிச் சென்றனர். இதனால், ஒரு கிலோ நாட்டுக்கோழி (உயிருடன்)ரூ.550 வரை விற்பனையானது. சில்லறைக் கடைகளில் ரூ.700 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனையில் சுணக்கம் (Declining sales)
அதேநேரத்தில் புரட்டாசி மாத விரதம் துவங்கியது முதல் நாட்டுக்கோழி விற்பனையில் சுணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் விதைப்பு பணிகள் சுறுசுறுப்பு அடைந்ததால், பலர் கோழிகளை விற்பனை செய்தனர். இதன் காரணமாக நாட்டுக்கோழி விலை சரிந்து ஒரு கிலோ, ரூ.450க்கு விற்பனையானது.
ரூ.400க்கு விற்பனை (Selling for Rs.400)
இதனிடையே தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், விருந்து, விசேஷம் நடப்பதைத் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதன் எதிரொலியாக நுகர்வு குறைந்து விலை மேலும் சரிந்து, ஒரு கிலோ ரூ.400க்கு விலை போகிறது.
இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!
பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?
கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!