தமிழக ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியம் சரவணன் ராமநாதபுரம் வருகை தந்தார். அப்போது அவர் பேசியதாவது, சென்னை ஐகோர்ட்டு கடந்த 4-ந்தேதி அளித்த தீர்ப்பில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கால்நடை வளர்ப்போருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கால்நடை வளர்ப்போர் (Livestock breeders)
ஆடு, மாடுகள் வளர்ப்பதற்கு ஏற்கனவே சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பு கால்நடை வளர்ப்பு தொழில் செய்ய இயலாத நிலையை உருவாக்கி உள்ளது. இந்த தீர்ப்பை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த வழக்கில் கால்நடை வளர்ப்போரையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட உள்ளோம். ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழக முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
மேலும் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ராமேசுவரத்திலிருந்து, சென்னை வரை கால்நடைகளுடன் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அவர் கூறினார். அப்போது மாநில, மண்டல, மாவட்ட, தாலுகா கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க
உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!
யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் புதிய திட்டம்: விரைவில் அமலுக்கு வரும்!