திருவாரூர் மாவட்டத்தில் குளம் அமைத்து மானியம் பெற மீன் வளப்போர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை விடுவித்துள்ளார்.
மீன் வளர்ப்பு மானியம் (Subsidy For Aquaculture)
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1000 ச.மீ பரப்பளவில் மீன்குளம் அமைத்து மீன்வளர்த்து வரும் விவசாயிகளுக்கு பண்ணை குட்டை புனரமைத்திடவும், விரால் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 10 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு அலகிற்கு ஆகும் செலவின தொகை ரூ.75 ஆயிரத்தில் 40 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
மூப்பு நிலை அடிப்படையில் இந்த மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தொடர்பு கொள்ள (For Contact)
மானியம் பெற விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ, 04366-290420 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வேலையை விட்டுப் போனதும், PF கணக்கில் இந்த தவறை செய்யாதிங்கள்: நஷ்டம் உங்களுக்கு தான்!
மத்திய பட்ஜெட் 2023: PM Kisan திட்டத்தில் அதிகரிக்கப்படும் நிதி!