குதிரைகள் மனிதர்களுடன் எளிதில் பளகக்கூடிய கால்நடை ஆகும். குதிரைகள் நல்ல விசுவாசமான, நன்றியுள்ள மிருகமாகும். இது இப்போது மட்டுமல்ல பல காலங்களுக்கு முன்பிலிருந்தே பெரிய ராஜாக்கள் மாளிகையில் குதிரைகள் அதிகம் வளர்க்கப்பட்டன. அச்சமயங்களில் ராஜாக்கள் தங்கள் பயணத்திற்கு குதிரைகளை அதிகம் பயன்படுத்தினர். நாட்கள் செல்ல செல்ல மனிதர்களின் பயணத்தி மாற்றங்கள் ஏற்பட்டு இருசக்கர வாகனம், ரிக்ஷ, போன்ற வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தது. ஆனாலும் இன்றைக்குக்கூட சிறந்த குதிரை இனங்கள் ராணுவங்களில் உபயோகப் படுத்தப்படுகின்றன. மேலும் சிறந்த இணக் குதிரைகளை வளர்ப்பவர்கள் அதன் பராமரிப்பு நன்றாக இருந்தால் குதிரை சவாரி, குதிரை பந்தயம் போன்றவற்றில் இருந்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
குதிரைகளின் முக்கிய இனங்கள்
நம் நாட்டில் குதிரைகளின் வளர்ப்பு என பார்த்தால் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. மேலும் இக்குதிரைகளில் பல்வேறு இணங்க உள்ளன.
மார்வாரி குதிரை
இந்த குதிரைகள் ராஜாக்கள் காலங்களில் போர்களில் பயன்படுத்தப் பட்டன. இதனால் தான் குதிரைகளின் உடம்பில் ராஜ பரம்பரையின் ரத்தம் ஓடுகிறது என்று கூறுவார். ராஜஸ்தானின் மார்வாரியில் இந்த இனம் அதிகம் காணப்பெறும். இக்குதிரைகளின் உடல் அகலம் 130 முதல் 140 மற்றும் உயரம் 150 முதல் 160 வரை இருக்கும். இக்குதிரைகளை விளையாட்டுகளில், போர்களில் மற்றும் ராஜா பரம்பரையின் மகிமையை அதிகரிக்கும் வகையில் வளர்க்கப்படுகின்றன. மேலும் ஒரு குதிரையின் மதிப்பே லட்ச கணக்கிளாகும்.
கத்தியவாரி குதிரை
இக்குதிரைகளின் பிறப்பிடம் குஜராத்தில் உள்ள செளராஷ்டிரா நகரமாகும். இவை குதிரைகளில் சிறந்த இனமாகவும், இவற்றின் நிறம் சாம்பல் மற்றும் இதன் உயரம் 147 அடி உயரமாகும். இவை குஜராத்தின் ஜூனாகட், கத்தியாவாடி மற்றும் அம்ரேலி ஆகிய இடங்களில் இக்குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ஸ்பிதி குதிரை
இவ்வகை குதிரைகள் மலை பிரதேச இடங்களுக்கு ஏற்றதாகவும் மற்றும் இவை ஹிமாச்சல் பிரதேசத்தில் அதிகம் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை மலை பிரதேச உபயோகங்களில் சிறந்த வகையில் பயன்படுபவை.
மணிபுரி போனி குதிரை
இவ்வகை இனம் நல்ல பலமானதாகவும், சுறுசுறுப்பானதாகவும் இருப்பவை. இக்குதிரைகள் போர்களில் மற்றும் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுபவை. இந்த இணக் குதிரைகளில் பல்வேறு நிறங்களில் உள்ளன.
பூட்டியா குதிரை
இவ்வகை குதிரை சிக்கிம், பஷ்சிம் பெண்களின் டார்ஜிலிங் நகரத்தில் காணப்பெறும். இவைகளை குதிரை பந்தயம் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்துவார்கள்.
கச்சி சிந்து குதிரை
இக்குதிரையை இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் 7வது இடத்தில பதிவு செய்துள்ளது. இக்குதிரையின் அடையாளமாக இதன் பொறுமை தன்மை அமைகிறது. இக்குதிரையின் மதிப்பு 3 லட்சத்தில் இருந்து 14 லட்சமாகும்.
எப்படி துவங்குவது குதிரை வளர்ப்பு
உங்களிடம் போதுமான இடவசதி இருந்தால் போதும் சிரமமின்றி குதிரை வளர்ப்பை துவங்கலாம். குதிரைகள் நல்ல நுண்ணறிவு மற்றும் உணர்ச்சி மிகுந்த நல்ல விலங்காகும். இதனால் தான் குதிரை வளர்ப்பு மிக எளியது, அதே சமயத்தில் அதிக பொறுப்புகளும் கொண்டவை. குதிரை வளர்ப்பின் அர்த்தம் என்ன என்றால் - வருடம் 365 நாட்களும் குதிரைக்கு தீவனம் அளிப்பது, பராமரிப்பது, சுத்தம் செய்வது, மற்றும் அதன் சம்பந்தமான அணைத்து பராமரிப்புகளையும் சீராக செய்து வர வேண்டும். மேலும் நீங்கள் சிரிது நாட்களுக்கு வெளியூர் செல்ல நேரிட்டால் குதிரைகளை கவனித்துக்கொள்ள நல்ல அனுபவமிக்க குதிரை ஆயிவாளரை நிர்ணயித்து செல்ல வேண்டும், மற்றும் போதுமான தீவன ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
குதிரைகளின் ஆயுட்காலம்
குதிரைகளின் ஆயுள் 25 முதல் 35 வருடமே ஆகும். ஒரு நல்ல சராசரி குதிரை 5 இல் இருந்து 6 வருட காலத்திலேயே இனப்பெருக்கம் செய்ய தொடங்கி விடுகிறது. இதன் இனப்பெருக்கத்திற்கு முன்னாள் அதன் மீது சவாரி செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது, காரணம் இவற்றின் எலும்புக்கூடுகள் மற்றும் எலும்புகள் சரியாகி அமைப்பு பெற்றிருக்காது.
குதிரைகளின் கொட்டகை அமைப்பு
குதிரைக்கு நல்ல நிலையான மற்றும் போதுமான தங்கும் இட வசதி மிக முக்கியம். குதிரைகளுக்கு ஒரு பாதுகாப்பான, ஒரு வெளிப்புற தங்குமிடம், தீவன கொட்டகை, ஒய்வெடுக்கும் இடம், போன்ற வெவ்வேறு இடங்கள் மற்றும் குதிரைகள் குளிப்பதற்கு நீச்சல் குளம் போன்ற சிறப்பு தேவைகளை அமைக்க வேண்டும். இவ்வகை தேவைகளை நம் இடத்திலேயே அமைத்து கொடுத்தால் குதிரைகள் தனது இடத்தை விட்டு வெளியே செல்லாது. மழை மற்றும் வெயிலி இருந்து பாதுகாக்க குதிரைகளுக்கு ஒரு சிறந்த தங்கும் இடம் அமைக்க வேட்மண்டும். ஒவ்வொரு குதிரைகளுக்கும் 170 சதுர அடி இட வசதி இருக்க வேண்டும். குதிரையின் கொட்டகை அமைப்பு நல்ல சுத்தமானதாக, காற்றோட்ட வசதி இருக்க வேண்டும், மற்றும் முக்கிய கதவின் அமைப்பு பெரிதாக இருக்க வேண்டும் இதனால் குதிரைகள் செல்வதற்கு வசதியாக அமையும்.
குதிரைகளின் தீவனம் மேலாண்மை
குதிரை தனது எடைக்கு 1 சதவீதம் அதிகமாக புற்கள் உட்கொள்ளும். இளம் மற்றும் சாத்தான் குதிரை இருந்தால் வருடம் முழுவதும் நீங்கள் மாறுபட்ட புதிய மற்றும் உலர்ந்த புற்களை தீவனமாக கொடுக்கலாம். இதில் புற்கள், அருகம்புல், காராமணி போன்றவற்றையும் தீவனமாக கொடுக்கலம். குதிரைக்கு சத்தான தீவனம் அளிக்க வேண்டும் என்றால் தவுடு, பீட்ரூட், பிளேட் மிஸ், ஓட்ஸ்,கம்பு மற்றும் வைட்டமின் ஆகியவற்றை குதிரையின் எடையை அதிகரித்த வேண்டினாள் மட்டும் பயன்படுத்த வேண்டும். வயதான மற்றும் காயம் உள்ள குதிரைகளுக்கு அதிகளவில் வைட்டமின் தேவை ஏற்படும். குதிரைகளின் தீவனங்களில் நைட்ரேட்டின் அளவு ௦.5 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.
குதிரைகளின் கவனிப்பில் சுகாதார மற்றும் நோய் தாடுப்பு சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கால்நடை மருத்துவர் வர இயலாத நேரங்களில் தாமே சிகிச்சை செய்ய நேரிட்டால் அதற்கான தேவை பொருட்களை தயராக வைத்துக்கொள்ள வேண்டும். நேராக நிற்க இயலாதது, அதிக நேரம் தூங்குவது, நேரத்திற்கு தீவனம உட்கொள்ளாதது, இவ்வகை செயல்கள் நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். ஈக்கள் மற்றும் புழுக்களால் குதிரைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதை தடுக்கும் வகையில் குதிரைகளுக்கு சிறந்த பாதுகாப்புகள் ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN