மாட்டுத் தொழுவமும் அதன் சுகாதாரமும்:
- மாட்டுத் தொழுவமானது சற்று உயரமான இடத்தில் தெற்கு வடக்காக இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.
- நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க வேண்டும்.
- மழை நீர், கழிவு நீர் ஆகியவை இயற்கையாக வழிந்தோட ஏற்ற முறையில் இருக்க வேண்டும்.
- மாட்டுத் தொழுவத்தின் தரையானது வழவழப்பற்ற கோடுகள் அடிக்கப்பட்ட சிமெண்டுடன் செங்கல் மற்றும் பாறைகளின் மேற்பகுதியை சொர சொரப்பாக்கிய பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
- இவ்வாறு செய்வதால் தரை கழுவ வசதியாகவும், கழுவிய நீர் தேங்காமலும், வழுக்காமலும் இருக்கும்.
- மேலும் தரையில் தொடர்பு கொள்ளும் மடி, காம்புகள் ஆகியவற்றை நுண்ணுயிரிகள் தாக்கா வண்ணம் பாதுகாக்கப்படும்.
- தொழுவங்களில் தீவனப் பாதை, தண்ணீர்த் தொட்டி, மாடு நிற்குமிடம், வடிகால் மற்றும் பால் கறவைப் பாதை ஆகியவை அமைத்திட வேண்டும்.
- தீவனப் பாதையின் அகலம் 90 செ.மீ. தண்ணீர் தொட்டியின் அகலம் 20-30 செ.மீ அளவில் இருக்க வேண்டும்.
- பால் கறவைப் பாதை அகலம் ஒற்றை வரிசையில் 90 செ.மீ – இரட்டை வரிசையில் 180 செ.மீ இருக்க வேண்டும்.
- இரட்டை வரிசை தொழுவத்தில் மாடுகளின் தலை உள்பக்கம் நோக்கி இருக்குமாறு அமைப்பதை விட கட்டிடத்தில் வெளிப்பக்கம் இருக்குமாறு அமைத்தலே நல்லது.
- உள்பக்கம் நோக்கி இருந்தால் மாட்டின் முகத்தை நோக்கி இருப்பதால் நோய் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பரவ வாய்ப்புகள் அதிகம்.
- கறவை மாட்டிற்கு முன்புறம் 1 மீட்டர் உயர சுவரும், 22 செ.மீ. இடைவெளியில் இரண்டு கம்பிகளும் பொருத்தப்பட்டால் போதுமானது.
- கூரையை தூண்கள் கொண்டு தாங்கச் செய்யவும்.
- கூரை வெளிப்பகுதியில் குறைந்தது 508 செ.மீ. வெளியே நீட்டி இருக்க வேண்டும். இதனால் மழைச்சாரல் உள்ளே வராமல் தடுக்க முடியும்.
- நம் நாட்டில் பொதுவாக தொழுவங்கள் மண் தரையாகவும் உயரம் போதுமானதாக இல்லாமலும், கழிவு நீர் செல்ல வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன.
- இத்தகைய சூழ்நிலையில் சுத்தமான பாலைப் பெறுவதற்கு இயலாமல் போகிறது.
- தொழுவத்தில் தினசரி இரு முறை சாணத்தை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
- சாணம் சரிவர அகற்றப்படாவிடில் ஈ, கொசு போன்ற பூச்சி இனங்கள் பெருக வழி வகுக்கும்.
English Summary: Some methods of setting up a healthy cattle shed
Published on: 24 October 2018, 12:23 IST