வெப்ப அயற்சி ஏற்படுவதால், கோழிகளைப் பாதுகாக்க பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைகளில் தெளிப்பான்களை உபயோகிக்குமாறு வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது. கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
மழைக்கு வாய்ப்பில்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அடுத்த 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 107.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.
கோழிகளில் வெப்ப அயற்சி
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பில்லை. கடந்த வாரம் இறந்த கோழிகள் வெப்ப அயற்சியால் (Thermal exhaustion) பாதிக்கப்பட்டு இறந்தது, கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெளிப்பான்
பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் பண்ணையாளர்கள், கோழிப்பண்ணைகளில் தெளிப்பான் உபயோகிக்கலாம். வெப்ப அயற்சியின் தாக்கத்தை குறைக்க தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின்-சி (Vitamin C) மற்றும் தாது உப்புக்கலவையை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?