மஹாராஷ்டிராவில், மிகவும் அரியதாக கருதப்படும், 'மட்ஜியல்' வகையைச் சேர்ந்த ஓர் ஆட்டுக்கு, 70 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை ஏற்க மறுத்த உரிமையாளர், 1.5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தார்.
மட்ஜியல் இன ஆடுகள்:
மஹாராஷ்டிராவில் உள்ள சாங்லி மாவட்டம் ஜாட் தாலுகாவில், பலரும், 'மட்ஜியல்' இன ஆடுகளை வளர்க்கின்றனர். செம்மறி ஆடுகளில் (Sheep) இருந்து வேறுபட்டுள்ள இவை, உயரமானவை என்பதுடன், அதிக வளர்ச்சி விகிதம் உடையவை. இறைச்சி (Meat) தரத்தில் மிக உயர்ந்தவை என, கருதப்படுகிறது. இதனால், இவ்வகை ஆடுகளின் விலை, தலா, 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை (Sales) ஆகிறது. இந்த வகை ஆடுகள் அதிகமிருக்கும் மட்ஜியல் கிராமத்தின் பெயரையே, அதற்கு வைத்துள்ளனர்.
1.5 கோடி ரூபாய்:
சாங்லி மாவட்டம் அட்பாடி தாலுகாவில் வசிப்பவர் பாபு மெட்காரி. பண்ணை (Farm) வைத்துள்ள இவர் வளர்க்கும், ஓர் ஆட்டின் பெயர் மோடி. சமீபத்தில், 70 லட்சம் ரூபாய் விலை தருவதாக ஒருவர் கேட்டும், அதனை பாபு ஏற்கவில்லை. இதுகுறித்து, அவர் கூறியதாவது:இந்த ஆட்டின் உண்மையான பெயர் சர்ஜா. நரேந்திர மோடி (Narendra modi) போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றவர். என் ஆட்டு மந்தையிலும், சர்ஜாவின் ஆட்சி தான் நடக்கிறது. இதனால் அதற்கு செல்லமாக மோடி என, பெயரிடப்பட்டது. மிக அதிர்ஷ்டகரமானது (Lucky) என்பதுடன், மதிப்பு மிக்க அதனை விற்பனை செய்ய விரும்பவில்லை. எனவே, 70 லட்சம் ரூபாய்க்கு கேட்டவரிடம், 1.5 கோடி (1.5 Crores) ரூபாய் என, கூறியதால் திரும்பி சென்றார். இந்த ஆடு மிக வசீகரமானது என்பதுடன், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிக செல்லமானது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆட்டினை விற்க மனமில்லாமல், விலையை ஏற்றிக் கூறியதால், வாங்க வந்தவர் திரும்பிச் சென்றார். விலையில் உயர்ந்த இந்த மட்ஜியல் ஆடு நிச்சயம் அதிர்ஷ்டகரமானது தான்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் கெடுபிடி! வேளாண் துறை அறிவிப்பு!