மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 June, 2021 9:54 AM IST
Credit : Vikaspedia

கறவை மாடுகளைப் பொருத்தவரை பருவகாலத்திற்கு ஏற்ப பராமரிப்பது மிக மிக இன்றியமையாதது ஆகும். அந்த வகையில், கோடை காலத்தில் பராமரிப்பது குறித்துப் பார்ப்போம்.

மேய்ச்சல் (Grazing)

கோடைகாலத்தில் கறவை மாடுகளைக் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

தீவனம் (Fodder)

  • பசுந்தீவனம், கலப்புத்தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர், நார் தீவனம் அளிக்கும் அளவை குறைக்க வேண்டும்.

  • பசுந்தீவனங்களை பகல் வேளையிலும் உலர் தீவனங்களை இரவு நேரங்களிலும் வழங்க வேண்டும்.

நறுக்கிக் கொடுத்தல் (Chopping)

  • நார் தீவனங்களைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பதன் மூலம் உடல் வெப்பம் தணியும்.

  • உயர் தீவளங்களான வைக்கோல், தட்டை ஆகியவற்றின் மீது உப்பு கலந்த தண்ணீர் அல்லது நாட்டுச் சரக்கரை கலந்த தண்ணீர் தெளித்து பதப்படுத்தியபின் வழங்க வேண்டும்.

  • கோடை காலத்தில் போதிய அளவு பசுந்தீவனங்கள் கிடைக்கவில்லையெனில் மர இலைகள், பீர்நொதி, மரவள்ளிக்கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ளத் தீவனங்களைப் பயன்படுத்தலாம்.

சோடா உப்பு (Baking soda)

1000 லோ டன் பீர் நொதிமீது ஒரு கிலோ சமையல் உப்பு ஒரு கிலோ சோடா உப்பைக் கலந்து கொடுக்க வேண்டும்.

தாது உப்புக் கலவை

  • வெயில்காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் தாது உப்புக்களின் இழப்யைச் சரிக்கட்ட, தாது உப்புக்கலவையை 50% சதவீதம் அதிகரித்துக் கொடுக்கவேண்டும்.

  • நாள் ஒன்றுக்கு அல்லது அதற்கு மேல் பால் கறக்கும் மாடுகளுக்கு தினமும் 20 -30 கிராம் தாது உப்புக்கலவை, 50 -100 கிராம் சமையல் உப்பு மற்றும் 30-50 கிராம் சமையல் சோடாவைச் சேர்த்து கொடுக்க வேண்டும்.

  • கோடை காலத்தில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும். எனவே நாள் ஒன்றுக்கு 15லிட்டர் அல்லது அதற்கு மேல் பால் கறக்கும் மாடுகளுக்கு தினமும் 20-30 கிராம் தாது உப்புக்கலவை, 50 முதல் 100 கிராம் சமையல் உப்பு, 30-50 கிராம் சமையல் சோடா சேர்த்து கொடுக்க வேண்டும். கோடைகாலத்தில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும்.

பருத்திக்கொட்டை (Cotton)

எனவே நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறவை மாடுகளுக்குப் பருத்திக்கொட்டை, வறுக்கப்பட்ட சோயா, இதர எண்ணெய்வித்துக்களை 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.

உடல் வெப்பம் (Body heat)

மாட்டுக்கொட்டகையில் நீர் தெளிப்பான், மின் விசிறி அமைத்து உடல் வெப்பத்தைக் குறைப்பதன் மூலம் தீவனம் உண்ணும் அளவை அதிகரிக்க முடியும்.

குளிர்ந்த குடிநீர் (Cold drinking water)

கறவை மாடுகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பேக்கரி ஈஸ்ட் (Bakery Yeast)

கோடையில் வெப்ப அயற்சியைத் தணிக்கக் கலப்பு தீவனத்தில் மாடு ஒன்றுக்கு 5 முதல் 10 கிராம் வரை பேக்கரி ஈஸ்ட் கலந்து கொடுக்கலாம். மேலும் புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கொடுக்கலாம்.

மூலிகை மருந்துகள் (Herbal medicines)

  • தற்காலத்தில் கோடை அயற்சியைத் தணிக்கவல்ல மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம்.

  • இவற்றைத் தவிர தினமும் 100 முதல் 200 கிராம் வரை அசோலாவைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.

  • மேலும் செலினியம், குரோமியம் ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படித் தீவனத்தில் அதிகரித்துக் கொடுக்கலாம்.

தகவல்
சக்தி பால் பண்ணை

மேலும் படிக்க...

சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!

கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

English Summary: Summer care for dairy cows!
Published on: 19 June 2021, 09:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now