கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று பேருந்து நிலையத்தை திறந்துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றாத அரசுக்கு மக்கள் இந்த வகையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வழக்கமான நடைமுறை
பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது அரசின் கடமை. அதனை அரசு நிறைவேற்றத் தவறும்போது, மக்கள் மீண்டும், மீண்டும் கோரிக்கையை முன்வைப்பது வழக்கம். ஆனால் அரசு கண்டு கொள்ளாத நிலையில், மக்கள் தங்களுக்குத் தெரிந்த நடைமுறையைக் கையாண்ட, அரசின் கவனத்தைத் தங்கள்வசம் திருப்புவர். அப்படியொரு சம்பவம்தான் இது.
தென்னங்கீற்றில்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அமைத்துக்கொடுக்காத அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக அங்குள்ள மக்களே தென்னங்கீற்றில் பேருந்து நிலையம் அமைத்தனர்.
சிறப்பு விருந்தினராக மாடு
பின்னர், அந்த பேருந்து நிலையத்தை திறந்துவைப்பதற்காக எருமை மாட்டை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். இதையடுத்து எருமை மாட்டை முன்னிலைப்படுத்தி கிராம மக்கள் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர்.
கண்டனம்
அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக கிராம மக்களே தென்னங்கீற்றில் பேருந்து நிலையம் அமைத்து, அதனை எருமை மாட்டைக்கொண்டு திறந்து வைத்த நிகழ்வு தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு சூப்பர் வசதி- ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!