Animal Husbandry

Saturday, 04 December 2021 06:55 PM , by: Elavarse Sivakumar

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு ஒன்று, அங்கிருந்த ஆவணங்களை வாயில் கவ்விச்சென்ற சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியது.

அத்துமீறிய ஆடு (Excessive goat)

தனி நபர் வீடுகளானாலும் சரி, அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்றாலும் சரி, சாவுகாசமாக நுழைவது ஆடுகளுக்கு கைவந்தக் கலை. அப்படிதான் இங்கு ஒரு ஆடு, அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததோடு மட்டுமல்லாமல், முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விச் சென்றுவிட்டது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் ஷவுக்பிபூரில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அரசு அலுவலகத்தில் 

இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்துவரும் ஊழியர்கள் சம்பவம் நடந்த அன்று, அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்த ஆடு அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணத்தை தனது வாயில் கவ்விச் சென்றது.

விரட்டிச் சென்றனர்

அலுவலகத்திற்குள் ஆடு நிற்பதை கண்ட ஊழியர்கள் அதை விரட்ட முயற்சித்தனர். இதனால், ஆவணத்தை தனது வாயில் கவ்விய கில்லாடி ஆடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால், அதிருச்சியடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓடிய ஆட்டை விரட்டி சென்றனர்.

ஊழியர்கள் விரட்டுவந்த போதும் ஆவணத்தை கிழே போடாமல் ஓடிய கில்லாடி ஆடு இறுதியாக அதை கிழித்து மென்று தரையில் போட்டுவிட்டு ஓடியது.ஆடுக் கிழே போட்டுச்சென்ற ஆவணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள் ஆவணம் முழுவதும் சேதமடைந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆடு ஆவணத்தை தூக்கிச்சென்றதையும், அதை பஞ்சாயத்து ஊழியர் விரட்டி செல்வதையும் சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மக்களே இப்படியும் வில்லங்கம் உங்களைத் தேடி வரலாம்.

மேலும் படிக்க...

ஆடுகளின் தேவை சரிந்தது, சிக்கலில் விவசாயிகள்

வெறும் 53,000 ரூபாயில் முதலில் ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)