விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது ஒருவிதம் என்றால், இக்கட்டான நேரங்களில் வாழ்வாதாரத்திற்கு கைகொடுப்பதற்காகக், கால்நடை வளர்ப்பையும் மறுபுறம் விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
ஆனால் தற்போது கழுதை வளர்ப்பும் இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக, ஆடு, மாடு வளர்ப்பு போல தற்போது கழுதை வளர்ப்பும் ஒரு தொழிலாக மேற் கொள்ளப்படுவது நமக்கு வியப்பையும் ஆச்சரியத் தையும் தரும் தகவலாகும்.
கழுதை மேயக்க
முன்பு கிராமங்களில் படிக்கின்ற காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை, கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என்றுக் கூறி திட்டவார்கள். ஆனால் இன்று படித்த பட்டதாரிகள் பலருக்கும் சரியான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், எதாவது தொழில் செய்து வருவாய் ஈட்டக் கழுதை வளர்ப்புக் கைகொடுக்கிறது. உண்மையில் அப்படியொரு சூழல் உருவாகி வருகிறது.
கழுதைப் பால்
எந்தத் தொழிலை செய்யலாம் என்று வழி தெரியாத நிலையில் பலர் உள்ளனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்ட இளைஞர்கள் இந்த கழுதை வளர்ப்பை தொழிலாக ஆர்வத்துடன் மேற்கொள்வது பாராட்டத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் 71% கழுதை இனங்கள் அழிந்து விட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க. மறுபுறம் கழுதை பாலின் மகத்துவத்தை கொரானா தாக்கத்தின் போது மக்கள் உணர தொடங்கியுள்ளனர்.
லிட்டர் ரூ.10,000
கழுதை பால் நோய் எதிர்ப்புதிறன் கொண்டதுடன் பல்வேறு சத்துகள். வைட்டமின்கள் உள்ளதாக தெரிகிறது. மருத்துவ குணமுள்ள இந்த பாலில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் உள்ளது. ஒரு கழுதை மூலம் நாள்தோறும் 500 மிலி முதல் 1 லிட்டர் பால் கிடைப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 1 லிட்டர் பாலின் விலை 7000 முதல் 10000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே இத்தகையத் தொழிலைக் கையில் எடுத்துக்கொண்டு அழிந்து வரும் இனங்களையும் பாதுகாப்போம். வருமானத்தையும் பெருக்குவோம்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை
94435 70289.
மேலும் படிக்க...