தமிழகத்தில் இன்றைய நாளில் மிகப்பெரிய பேசுப்பொருளாக இருக்கும் விஷயங்களில் ஒன்று நாய் பராமரிப்பு. மனிதர்கள் மீதான நாய்களின் தாக்குதல்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு வகையான நாய்களை பராமரித்து வருவதோடு Yazhli Pet Kennel என்பதன் மூலம் நாய்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரும் ராம் அவர்களுடன் கிரிஷி ஜாக்ரன் சமீபத்தில் நேர்க்காணல் மேற்கொண்டது.
தன்னிடமுள்ள நாய்களில் ஒரு சில இனங்களை நேரடியாக நமக்கு அறிமுகம் செய்து வைத்து, அந்த குறிப்பிட்ட நாய் இனங்களின் சிறப்பம்சம் என்ன? அவற்றினை பராமரிக்கும் விதம்? நாய் விற்பனையினை தொழிலாக கையாளும் போதும் அதிலிருக்கும் சவால்கள் என்னென்ன? என்று பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார் ராம். அதன் விவரங்கள் பின்வருமாறு-
Great Dane dog breed:
ராவணன், ஹிட்லர், கூப்பர் என பெயரிடப்பட்ட தன் செல்லப்பிராணிகளை ஒவ்வொன்றாக நமக்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் சிறப்பம்சங்களை விளக்கினார் ராம். முதலில் நாம் சந்தித்தது ராவணன்.
Great Dane dog breed- வகையை சேர்ந்தது ராவணன். ”இப்போ என்கிட்ட இருக்கிற இந்த Great Dane dog breed பார்த்தீங்க என்றால் இது ஒரு ரிவர்ஸ் கலர். தமிழில் புளிச்சாறை நிறம்னு சொல்லலாம். ஒரு சிலர் வெளியில நாயோட போகும் போதே அனைவரின் பார்வையும் நம்ம மேல விழ வேண்டும்னு நினைத்தால் அதற்கேற்ற வகை Great Dane என்று சொல்லலாம். இதோட உயரம், உடலமைப்பு இதெல்லாம் ஒரு கம்பீரமான லுக் தரும். உரிமையாளர் பக்கத்துல இருந்தா ரொம்ப இயல்பா இருக்கும், இல்லனா கொஞ்சம் சிரமம் தான். இதோட பாரமரிப்பு செலவுனு பார்த்தால், ஒரு குட்டி குதிரை வளர்த்தால் என்னாகுமோ அதற்கேற்ற செலவு இருக்கும். நீங்க பாட்ஷா படம் பார்த்து இருப்பீங்க, அதுல ரஜினி பக்கத்துல பயங்கர லுக்ல இருக்கிற நாய் இதே Great Dane dog breed வகை தான்” என்றார்.
ராட்வீலர்- Handle with care:
தமிழகத்தில் பேசுப்பொருளாக மாறிய ராட்வீலர் நாயினை நமக்கு அறிமுகப்படுத்திய ராம், அதன் குணாதிசயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். “ இது ஈஸியா Temper ஆகிவிடும். சின்ன நாய், குட்டி கோழிக்குஞ்சு, பெண்கள், குழந்தைகள் இவற்றையெல்லாம் பார்க்கும் போதே Temper ஆக நிறையா வாய்ப்பிருக்கு. இப்ப நம்ம பண்ணையிலயே இவ்வளவு நாய்கள் இருக்கு. ஆனால், இதை நாங்களே ரொம்ப மிருதுவாக தான் தொடுவோம். எந்த நாயாக இருந்தாலும், அதோட குணாதிசயங்களை தெரிந்துக் கொண்டு வழக்கத் தொடங்கினால் ஆபத்து கிடையாது.”
”உலகளவில் இதோட தாக்குதல் குறித்து செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்குது, அதற்கு காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே. இவ்வளவு ஆபத்து இருந்தாலும், பாதுகாப்பு வசதிக்காக நாயினை வளர்க்க விரும்புபவரின் நிறைய பேரின் முதல் சாய்ஸ் ராட்வீலர் பக்கம் தான் இருக்குது. ராட்வீலரை பொறுத்தவரை சிம்பிளா சொல்லணும்னா "Handle with care " என்பது தான் ஒரே வழி” என்றார் ராம்.
Siberian Husky, Tiny toy dog breed, Pug breed, beagle dog breed, French bulldog breed, Belgian Malinois, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வகைகளையும் பராமரித்து விற்பனை செய்து வருகிறார் ராம். நாய் வாங்க விரும்புவோர், நாய் பராமரிப்பில் சந்தேகம் உள்ளோர் கீழ்க்காணும் தொடர்பு எண் மூலம் ராம் அவர்களை அணுகலாம். (தொடர்பு எண்: 97901 32779 )
Read more:
இனச்சேர்க்கைக்கு சரியான காளைகளை தேர்வு செய்வது எப்படி?
Rabbit Farming: முயல் ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்குமா?