Animal Husbandry

Saturday, 15 August 2020 07:22 AM , by: Daisy Rose Mary

Credit: The Economics Times

மீன் வளர்ப்பு தொழில் சார்ந்த விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அமைச்சகம் மீன்வளத் துறை சார்ந்த விவசாயிகளுக்கு உள்ளீட்டு மூலதனத்திற்கான நிதியுதவி வழங்கிட ஏதுவாக வங்கியின் மூலமாக கடன் உதவி பெற்றிட விவசாய கடன் அட்டை (Kisan credit card) வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்? - Who can apply 

இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக மீன்பண்ணை மற்றும் குளங்கள் வைத்திருப்போர், பொதுப்பணித்துறை, ஊராட்சி நீர் நிலைகளை குத்தகை எடுத்து மீன்வளர்ப்பு பணி மேற்கொள்பவர்கள், மீன்குஞ்சு பொறிப்பகம், மீன் வளர்ப்பு பண்ணைகள், மீன் விதைப்பண்ணைகள், மீன் விற்பனை செய்வோர், வண்ண மீன் வளா்ப்போர், மீன் பதனிடும் தொழில் புரிவோர் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் மீன் வளர்ப்போருக்கு உள்ளீட்டு மூலதனமாக மீன் குஞ்சுகள், மீன் உணவு, இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், மீன் அறுவடை, விற்பனை செய்தல், குத்தகைஎ தொகை போன்றவற்றுக்கு கடன் பெறலாம்.

பயன்பெற யாரை அணுகவேண்டும்?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான பயனாளிகள் திருநெல்வேலி மீன்வள துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக நாள்களில் அணுகலாம் .

கூடுதல் விவரங்கள் பெற்றிட உதவி இயக்குநர், மீன்வள துறை, 42 சி, 26வது குறுக்குத் தெரு, மகாராஜ நகர், திருநெல்வேலி – 627 011 என்ற முகவரியிலோ அல்லது 0462 – 258 1488, 93848 24280 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க... 

நல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்!

''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!

தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம் - வேலூர், திருப்பூர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)