Animal Husbandry

Tuesday, 22 June 2021 08:45 PM , by: Elavarse Sivakumar

திருப்பூர் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சிறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செலவு குறையும் (The cost will go down)

விவசாயத்தைப் பொறுத்தவரை, கால்நடை வளர்ப்பையும் கையில் எடுக்கும்போது, இடுபொருட்களுக்கு செய்யும் செலவும் குறையும். மகசூலும் அதிகரிக்கும்.

பல்வேறு திட்டங்கள் (Various projects)

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த காலங்களில், பல்வேறு மாவட்டங்களில், கோழிப்பண்ணை அமைக்க, பயனாளிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

தற்போது, கொரோனாவால் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றக் கோரிக்கை எழுந்துள்ளது.

கால்நடை விவசாயிகள் (Livestock farmers)

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உடுமலை சுற்றுப் பகுதி கிராமங்களில், விவசாயத்திற்கு இணையாக கால்நடை வளர்த்தல் தொழிலையும் பலரும் மேற்கொள்கின்றனர்.

இறைச்சி விற்பனை (Sale of meat)

ஊரடங்கு காலத்திலும் இறைச்சி விற்பனை காணப்படுவதால், பலரும், கோழிப் பண்ணை அமைப்பதில் ஆர்வம் காட்டு கின்றனர்.

செலவு அதிகம் (The cost is high)

  • ஆனால், கோழிப்பண்ணை அமைப்பதில், கூடாரம் அமைக்கவும், தீவனம் வாங்கவும் கணிசமானத் தொகையைச் செலவிட வேண்டிய நிலை உள்ளது.

  • எனவே, திருப்பூர் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

  • ஏற்கனவே, கோழிப்பண்ணை மேம்பாட்டில், சிறந்து விளங்கினாலும் சிறு விவசாயிகளின் நலன் கருதி, இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

புதியவர்களுக்கு வாய்ப்பு (Opportunity for newcomers)

இதன் வாயிலாக, கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் விருப்பத்துடன் தங்கள் ஆசையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் அரசின் திட்டங்கள் மூலம் பயனடைவர்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் படிக்க...

கோழிப்பண்ணை அமைக்க 20 லட்சம் வரை மானியம் - உதவும் தேசியக் கால்நடைத் திட்டம்!

கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)