விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான அரசு சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் 10.05.2023 அன்று நடைபெறுகிறது.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்:
- ஆட்டு பண்ணையத்தில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஆட்டுப்பண்ணை தொழிலில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள் எவை
- 50% மானியத்தில் 10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான அடிப்படை காரணிகள்
- 100-500 எண்ணிக்கையில் வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகளுக்கான பண்ணை அமைப்பு மற்றும் மேலாண்மை உத்திகள்
- நடைமுறையில் உள்ள கால்நடை சார்ந்த மத்திய, மாநில அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்க உரை அளிக்கப்படும்
தங்கள் சந்தேகங்களுக்கு விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அவர்களுடன் கலந்துரையாடி தீர்வு காணலாம்.
ஆட்டுப்பண்ணையை தொடங்குவது முதல் அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் ஆட்டுப்பண்ணையம் அமைக்க அரசு திட்ட அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும். ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளவும்.
அலை பேசி / தொலைபேசி எண்கள்: 91-94899 50555
91-94431 02139
91-94863 79484
04563-220244
அனைத்து மாவட்ட கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் முன் பதிவு மிக அவசியம்.
இத்தகவல்: முனைவர் வெ.பழனிச்சாமி
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
எண். 16-A, அன்னமராஜா நகர்,
இராஜபாளையம் - 626 117
விருதுநகர் மாவட்டம்.
மேலும் படிக்க:
கொளுத்தும் வெயிலால் கோழிகளுக்கு வரும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?