Animal Husbandry

Wednesday, 16 March 2022 09:27 AM , by: R. Balakrishnan

Twin Embryonic egg sales

உடுமலையில், இரட்டை கரு முட்டைகள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை வாங்க அசைவப்பிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பகுதியில், முட்டைக்கோழி வளர்ப்பு பண்ணைகள் அதிகம் உள்ளன. இதேபோல், உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. அதேநேரம், ஆங்காங்கே முட்டைக்கோழி வளர்ப்பு பண்ணைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கு, 18 வாரம் வயதான கோழி, முட்டை உற்பத்திக்கு பண்ணையில் விடப்படுகிறது.அந்தக் கோழி தொடர்ந்து, 72 வாரம் வரை முட்டையிடுகிறது.

இரு கருமுட்டை (Twin Embryonic egg)

முட்டை உற்பத்திக்குப் பிறகு, கோழிகள் இறைச்சிக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, தினமும், ஒரு கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள முட்டை டீலர்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. இப்பண்ணைகளில் உள்ள கோழிகள், சில சமயங்களில் இரு மஞ்சள் கரு உள்ள முட்டைகளை இடுகிறது. அவை, மார்க்கெட்டில், 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவற்றை வாங்க, அசைவப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கால்நடைத்துறையினர் கூறியதாவது: சமீபகாலமாக, விற்பனையாளர்கள் சிலர், இரட்டைக்கரு முட்டைகள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவை, சாதாரண முட்டையை விட, அளவில் சற்று பெரிதாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இரட்டைக் கரு முட்டைகளை கேட்டு வாங்குகின்றனர்.

ஓட்டல்களிலும், இதுபோன்ற முட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள் இந்த முட்டைகளை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேநேரம், குழந்தைகள் உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க

மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!

சினைப் பிரச்சனைக்குத் தீர்வு: காங்கேயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)