மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 March, 2021 9:50 AM IST
Credit : TANUVAS

இந்தியாவில் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள தகவல் மாற்றம் தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சி காரணமாகவும் அதிவேக இணையதளச் சேவை (Internet Service) மற்றும் மலிவான ஸ்மார்ட் போன் தொழில்நுட்பங்கள் வாயிலாகவும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் இடையேயான தகவல் பரவலாக்கம் மேம்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவும் வகையில் இரு செயலிகளை மிக எளிதாக உருவாகியுள்ளது TANUVAS.

TANUVAS பயிற்சி அட்டவணை செயலி

கால்நடைப் பண்ணையாளர்களும் விவசாயச் பெருமக்களும் பயன்பெரும் வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu University of Veterinary Sciences) புதிய எளிமையாகப் பயன்படுத்திடும் வகையில் கால்நடை பண்ணை வளர்ப்பு மற்றும் மேலாண்மை ஆலோசனைகள் மற்றும் வியாபார வழிகாட்டுதல்கள் போன்ற சேவைகளை உள்ளடக்கிய அலைபேசிச் செயலிகளை (Mobile Application) உருவாக்கி வருகிறது. இச்சேவையின் முதற்கட்டமாகப் பண்ணையாளர்கள் தேவைக்காக பல்கலைக்கழகத்தின் பல்வேறு மையங்கள் மூலம் அளிக்கப்படும் நிலையப் பயிற்சிகள் / புறநிலையப் பயிற்சிகளின் விவரங்கள் மாவட்ட அளவில் எந்தெந்தப் பயிற்சி மையங்கள் வாயிலாக எந்த நாள்களில் வழங்கப்படுகின்றன என்பதை இளைஞர்கள் தொழில்முனைவோர் விவசாயிகள் உடனுக்குடன் அறியும் வண்ணம் TANUVAS பயிற்சி அட்டவணை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி ஆண்டிராய்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TANUVAS Calendar எனக் குறிப்பிட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் செயலியில் உள்ள வழிகாட்டுதலின்படி தங்கள் தொலைபேசி எண் மற்றும் பிற விவரங்களைப் பதிவு செய்து செயலியைப் பயன்படுத்தலாம். இச்செயலியில் ஒரு மாதத்தை தேர்ந்தெடுத்து அதில் உள்ள ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்தால் அச்சமயத்தில் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளின் தலைப்பும் தேதியும் தோன்றும். குறிப்பிட்ட தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் அது நடைபெறும் இடம் குறித்த விவரம் தோன்றும். பயிற்சி (Training) நெருங்கும் தேதியில் நினைவூட்டல் செய்யக்கூடிய வசதியும் இதில் உள்ளது.

TANUVAS – தீவனக் கணக்கீடு செயலி

TANUVAS – தீவனக் கணக்கீடு செயலி அதாவது கால்நடைகளின் உடல் எடைத் தேவைக்கு ஏற்ப எந்த அளவில் பசுந்தீவனம் (Green Fodder), உலர் தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் எந்த அளவில் பால் உற்பத்தி போன்ற உற்பத்திப் பெருக்கத்தை நாம் பெற முடியும் என்ற தீவனக் கணக்கீட்டு வழிகாட்டிச் செயலியும் உருவாக்கப்பட்டுத் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனையும் மேற்கண்டவாறு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள வழிமுறைகளின்படி பயன்படுத்தி விவரம் அறியலாம்.

பண்ணைத் தொழிலின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் இத்தகைய மின் ஊடக விரிவாக்கச் சேவைகள் அதாவது அலைபேசி செயலிகள் நல்லதொரு பயனையும் வளர்ச்சியும் பண்ணையாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் வழங்கிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆசிரியர் : முனைவர் சு. திலகர்

ஆதாரம் : கால்நடைக் கதிர்

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!

கால்நடைகளுக்கான தீவன சோளம் சாகுபடி முறை!

English Summary: Two Mobile Applications useful for Livestock breeders!
Published on: 27 March 2021, 09:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now