பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று, மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. ரூ.2 கோடி வரை விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும். சந்தை நடைபெறும் போது, சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும். வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
மாடுகள் விற்பனை (Cows Sales)
பொள்ளாச்சி சந்தையில் பெரும்பாலும் கேரள வியாபாரிகளே விலை நிர்ணயம் செய்து மாடுகளை வாங்கி செல்கின்றனர். பல வாரத்துக்கு பிறகு, இம்மாதம் துவக்கத்திலிருந்து, மாடுகள் வரத்து அதிகரிக்க துவங்கியது. இதில், இன்று நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுமார் 2500 மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
இதனை வாங்க கேரள வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால், சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. இதில், காளை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், எருமை ரூ.38 ஆயிரம் வரையிலும், ஆந்திரா மாடுகள் ரூ.45 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.15 ஆயிரம் என விற்பனையானது.
நேற்று ஒருநாள் மட்டும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
கறவை மாடு வளர்ப்பு: இளம் தலைமுறை தவிர்க்க காரணம் என்ன?
பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் மாணவர்களுக்கு பரிசு: இளைஞர்கள் அசத்தல்!