பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 October, 2021 12:03 PM IST

நோய் வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப கால்நடை மற்றும் கோழிகளுக்கு நோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்காகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

உயிர்காக்கும் (Life-saving)

அவ்வாறு கால்நடைகளுக்குத் தடுப்பூசிகளைத் தகுந்த சமயத்தில் கால்நடை மருத்துவர் உதவியுடன் தவறாமல் போடுவதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து கால்நடைகளைப் பெருமளவில் காப்பாற்றி விடலாம்.

எனவே, கால்நடை வளர்ப்போர் தடுப்பூசி போடும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாகக் கடைபிடித்து, தமது தவறாமல் தடுப்பூசி போட்டு தமது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடும் வழிமுறைகள் (Vaccination procedures)

  • ஆரோக்கியமான கால்நடைகளுக்குத் தான் தடுப்பூசிகள் போட வேண்டியது அவசியம்.

  • வயதிற்கேற்ற அல்லது பருவத்திற்கேற்றத் தடுப்பூசியை உரிய நேரத்தில் போட வேண்டும்.

  • நோயக் கிளர்ச்சி ஏற்படுவதற்கு முன் தடுப்பூசி போடுவது முக்கியம்.

  • தடுப்பூசிகள் தகுந்த குளிர்சாதன வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • தடுப்பூசிகளைக் காலை அல்லது மாலை வேளைகளில் குளிர்ந்த நேரத்தில் தான் போட வேண்டும்.

  • வெயில் அதிகமுள்ள நேரத்தில் தடுப்பூசிகளைப் போடக் கூடாது.

  • கால்நடைகள் சினையாக இருந்தால் கால்நடை மருத்துவரிடம், எத்தனை மாத சினை என்பதை கூறிய பின் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படியேத், தடுப்பூசி போடுவதை முடிவு செய்ய வேண்டும்.

  • தடுப்பூசி போடும் பொழுது ஸ்டீராய்டு போன்ற மருத்துகளைக் கொடுக்கக்கூடாது.

  • வேறு எந்த மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கால்நடை மருத்துவரிடம் தடுப்பூசி போடுவதற்கு முன் தெரிவிக்க வேண்டும்.

மேய்ச்சல் கூடாது (Do not graze)

தடுப்பூசி போட்ட பின் கால்நடைகளை இரண்டு நாட்கள் மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமல் கொட்டகையிலேயே வைத்து தண்ணீர் மற்றும் தீவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க...

மாதம் ரூ. 50,000 முதலீடு, 14 லட்சம் வருமானம்! 35% அரசு மானியம்! விவரம் இதோ

மாட்டுப்பண்ணையை லாபகரமாக நடத்துவது எப்படி?

English Summary: Vaccination for livestock-adherents!
Published on: 27 September 2021, 07:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now