Animal Husbandry

Wednesday, 09 September 2020 10:18 AM

குறைந்த செலவில் நிறைந்த லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்றாகத் திகழ்வது கோழி வளர்ப்பு. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தொழிலில் உள்ள சவாலான பணி எதுவென்றால், கோழிக்குஞ்சுகளைப் பராமரிப்பதுதான்.

மஞ்சள் சீரக மருந்து

அவ்வாறு பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம். முதல் இரண்டு வாரம் ஆன கோழிக்குஞ்சுகளுக்கு மஞ்சள் சீரக மருந்து தர வேண்டும்.

தயாரிக்கும் முறை

  • சீரகம் - 10 கிராம்

  • மஞ்சள் - 5 கிராம்

  • தண்ணீர் - 1.5 லிட்டர்

  • கொதிக்க வைத்து 1 லிட்டராக்க வேண்டும்

இரண்டு வாரத்திற்கு பிறகு வாரம் ஒரு முறையும், ஒரு மாதத்திற்கு பிறகு
வேப்ப இலை, முருங்கை இலை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.

குடற் புழு நீக்கம்  (Deworming)

45 (ம) 90ம் நாளில் 2 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் கற்றாழையைக் கலந்து கொடுக்க வேண்டும். இதனைக் கடைப்பிடித்தால், எளிதில் குடற்புழுக்களை நீக்கம் செய்ய முடியும்.

மேலும் படிக்க: இலக்காகிய மீன்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் மற்றும் காரணிகள்

தடுப்பூசி அட்டவணை (Vaccination)

  • 5 முதல் 7 நாள் ஆன கோழிக்குஞ்சிற்கு இராணிக்கெட் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டு கொடுக்க வேண்டும். இந்தத் தடுப்பூசியை கண் அல்லது நாசித்துவாரத்தில் செலுத்த வேண்டும்.

  • 28 ம் நாள் அதாவது 4 வாரங்கள் ஆன கோழிக்குஞ்சிற்கு இராணிக்கெட் தப்பூசியை(லசோட்டா) ஒன்று அல்லது இரண்டு சொட்டு, குடிநீரிலோ அல்லது நாசித்துவாரத்தில் செலுத்த வேண்டும்.

  • 42ம் நாள், அதாவது 6 வாரங்கள் ஆனக் கோழிக்குஞ்சிற்கு கோழி அம்மைத் தடுப்பூசியை தசையில் 0.5 மில்லி அளவுக்கு செலுத்த வேண்டும்.

  • 56ம் நாள் அதாவது 8 வாரங்கள் ஆன கோழிக் குஞ்சிற்கு இராணிக்கெட்(ஆர்.டீ.வி.கே. அல்லது ஆர்2 பி) தடுப்பூசியை இறக்கையில் தோலுக்குஅடியில் ஊசி மூலம் 0.5 மில்லி அளவுக்கு செலுத்த வேண்டும்.


தகவல்
முனைவர் ப.மேகலா,
உதவிப் பேராசிரியர்,
கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
நாமக்கல்

மேலும் படிக்க...

நோனி பழம்: என்ன பழம் இது? இது தலைமுடியை என்ன செய்யும்?

வேளாண் செய்திகள்: உளுந்து விதைகள் 50% மானியத்தில் பெறலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)