பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் (sheep market) விற்பனை களைகட்டியது. ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இன்று வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் (Merchants) தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில், பிரதி வாரம் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு, வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.
ஆட்டுச்சந்தை:
இந்த வாரச் சந்தைக்கு திருச்சி மட்டுமில்லாது துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, வெளி மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகை ஆடுகள் விற்பனை (Sales) செய்யப்பட்டன. இவற்றை வாங்குவதற்காக திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் சமயபுரம் சந்தையில் வழக்கம்போல் குவிந்திருந்தனர்.
அதிகளவில் விற்பனை
தமிழர் திருநாளான பொங்கல் விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சமயபுரம் வாரச் சந்தையில் இன்று வழக்கத்தினை விட அதிகளவில் வர்த்தகம் (Trade) நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் , ஆடுகளை வாங்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியபாரிகள், பொதுமக்கள் சந்தையில் கூடினர். கொரோனா (Corona) காலகட்டம் என்பதால் ஆடுகள் வரத்து குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு (Sheep sales) வந்ததால், சமயபுரம் சந்தையில் கடந்தாண்டு பொங்கல் விழாவிற்கு நடந்த வியாபாரத்தைவிட நிகழாண்டில் ஒரு கோடி (1 Corre) ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வெள்ளாடுகளில் மடி நோயைத் தடுக்க கால்நடை மருத்துவர் அறிவுரை!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!
பிப்ரவரி மாதத்தில் நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக ஆன்லைன் தேர்வு!