Animal Husbandry

Friday, 23 July 2021 10:40 PM , by: R. Balakrishnan

Credit : News TM

மழைக்காலங்களில் செம்மறியாடுகளை துள்ளுமாரி நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தி

கறவை மாடுகளில் பால் உற்பத்தியை (Milk Production) நிலைப்படுத்த மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கறவை மாடுகளுக்கு தீவனம் குறைந்தால், உடனடியாக பால் அளவு குறையும். எனவே மாடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் வைக்கோலினை கொடுக்க வேண்டும்.

துள்ளுமாரி நோய்

செம்மறியாடு, வெள்ளாடுகளுக்கு ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை இனவிருத்தி காலம் ஆகும். இந்த காலமானது தீவன அளவையும் (Fodder Limit), தட்பவெப்ப நிலையையும் பொறுத்து அமையும். எனவே இந்த காலங்களில் கூடுதலாக அடர்தீவனம் அளித்தால், ஆடுகள் அதிக அளவிலான குட்டிகள் ஈன வாய்ப்பு உள்ளது. மேலும், குட்டிகளின் பிறப்பு எடை சீராக இருக்கும்.

பொதுவாக மழைக்காலங்களில் செம்மறியாடுகளை துள்ளுமாரி நோய் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிதாக முளைத்த பசுமையான புல்வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகம் காணப்படும். இது எல்லா ஆடுகளை தாக்கினாலும், இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியினை (Vaccine) அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி மழைக்காலத்திற்கு முன்பாக அளித்து துள்ளுமாரி நோயில் இருந்து ஆடுகளை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

கால்நடைகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)