மருத்துவத்துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. விலங்குகள் இரண்டு வகை படும் ஒன்று சிந்திக்க தெரிந்த விலங்கு (மனிதன்) மற்றொன்று சிந்தனை இல்லாத விலங்கு. இது அனைத்து நிலம் வாழ் ஜீவராசிகளையும் குறிக்கும். ஒரு கால்நடை மருத்துவராக இந்த சமூகத்தில் எண்ணிலடங்கா பல பணிகள் செய்து வருகின்றனர். ஆனால் இவை அனைத்தும் பார்வைக்குப் புலப்படாமல் உள்ளன. இதற்காகவே பொது மக்களுக்கு இடையே கால்நடை மருத்துவரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
ஒரு மருத்துவராக கால்நடை மருத்துவர் கிராமப்புறங்களில் சிகிச்சை பார்ப்பது கிராமங்களில் வாழும் மக்களுக்கு மகத்தான சேவைகளை அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வழி வகுக்கிறது. ஒரு விவசாயி எப்படி விவசாயம் செய்து நாட்டுக்கு உணவு வழங்குகிறார்களோ அதேபோல் ஆடு, மாடுகள், கோழிகள், முலம் கிராமத்து மக்கள் வாழ்வாதாரம் உயர கால்நடை மருத்துவர் சிகிச்சை பார்த்து அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை பார்ப்பது இப்போது சாதாரண விஷயமல்ல. பாம்புக்குக் கால்கள் கிடையாது, மீனுக்கு இறைப்பை கிடையாது, நத்தைக்கு முடி கிடையாது, நண்டுக்கு கழுத்து கிடையாது, இதெல்லாம் இருந்தும் மனிதன் சரியே கிடையாது. இப்பொழு செல்லப்பிராணி வைத்திருப்போர் இணையத்தளத்தில் அரைகுறையாக படித்துவிட்டு மருத்துவர்கள் இடம் வாதாடுகின்றனர். இவர்களுக்குப் புரிய வைப்பதும் இப்போது மிகப் பெரிய கடமையாக மாறிவிட்டது.
இவை மட்டுமல்லாமல் மனிதர்களால் வேட்டையாடப்படும் காட்டு மிருகங்களுக்கும் வைத்தியம் பார்க்கப் படுகின்றன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு உயிரியல் பூங்கா, தேசிய பூங்காக்கள் போன்ற இடங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
பல அரசு (IVRI,NDRI,CCMB,CDRIetc..) மற்றும் தனியார் நிறுவங்களின் மூலம் உணவு பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
நவீன தொழிலுலகில் கால்நடை மருத்துவர்கள், கால்நடைகளுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்திசெய்வதிலும், அதை பரிசோதித்து ஆராய்ச்சிசெய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு இப்போது வளர்ந்து வரும் மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றன. ஒருபுறம் இதற்காக விவசாயமும் மறுபுறம் கால்நடைத் துறையும் ஈடுகட்டி செயலாற்றுகின்றன. ஒரு மாட்டிற்கு சுத்தமான உணவு அளிப்பது முதல் ஒரு மனிதன் சுத்தமான உணவு உண்ணும் வரை கால்நடை மருத்துவரின் பங்களிப்பு உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தியும் பெருகி அந்த உணவை சுத்தமாக அளிப்பது வரை பல வழிமுறைகள் செயலாற்ற படுகின்றன.
பால், இறைச்சி மூலம் பரவக்கூடிய நோய்களும் உள்ளன. பால் pasteurization process பிறகே விற்பனைக்கு வருகின்றன. இறைச்சிகள் கால்நடை மருத்துவரால் அறுக்கப்படுவதுற்கு முன்னும் பின்னும் பரிசோதிக்கப்பட்டு (ante mortem & post mortem inspection) பிறகு விற்பதற்கும் ஏற்றுமதிக்கும் அங்கீகரிக்க படுகின்றன.
இது மட்டுமல்லாமல் இன்னும் எண்ணிலடங்கா பல துறைகளில் எங்களது பங்களிப்பு உள்ளன. ஆனால் இந்த சமூகம் எங்களை மாட்டு டாக்டர் என்றே அழைக்கின்றனர். இதனால் எங்களுக்கு வேதனை அல்ல. இவ்வளவு பணியாற்றினாலும் எங்களது பணியை ஒரே வார்த்தையில் சுருக்கி விட்டீர்கள் என்ற வருத்தம்தான். நாங்கள் ஒரு கால்நடை மருத்துவர்கள் என்று கூற கௌரவமும், கர்வமும் கொண்டுள்ளோம்.
மனிதன் தனக்கு ஏற்பட்ட வலியையும் காய்ச்சலையும் மருத்துவரிடம் விவரிக்க முடியும். எங்கள் நோயாளி பாவம் வாய் பேச முடியாது. ஆனால் நன்றியோடு இருக்கும் என்பதில் எங்களுக்கு என்று சந்தேகமே இல்லை. கால்நடை மருத்துவராக நான் மிகவும் பெருமை படுகிறேன்.
Dhanvandhini.B
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி-09.