கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் மிக முக்கியமானது சோயா புண்ணாக்கு.
கோழிகளின் வாழ்வாதாரம் (Livelihood of chickens)
இந்த சோயா புண்ணாக்கை நம்பி தமிழகத்தில் பல லட்சம் கோழிகள் வாழ்கின்றன. குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகள் வாயிலாக வாரம் 2 கோடி கிலோ கறிக்கோழிகளும், திருப்பூர், கோவை, ஈரோடு, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட பகுதிகளில் வாரம் 40 லட்சம் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விலை உயர்வு (increase in price)
இந்நிலையில் கறிக்கோழிகளின் பிரதான தீவனமாக உள்ள சோயாப் புண்ணாக்கின் விலை, அவ்வப்போது உயர்ந்து வருவதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உற்பத்தியாகும் சோயாப் புண்ணாக்கு அங்கிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
எவ்வளவுத் தேவை? (How much is needed?)
தமிழகத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ 50,000 மெட்ரிக் டன் சோயாப் புண்ணாக்கு கறிக்கோழி தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இவை அனைத்தும், இறக்குமதி செய்யப்பட்டு, கோழிகளுக்குத் தீவனமாகப் பயன் படுத்தப்படுகின்றன.
விழிப்புணர்வு இல்லை (No awareness)
இதனிடையே, சோயாப் புண்ணாக்கு விலை அவ்வப்போது உயர்வதால் தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வளவு தேவை இருந்தும், தமிழகத்தில் சோயாப் புண்ணாக்கு உற்பத்தி குறித்த விழிப்புணர்வு கிடையாது.
இதனால் தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம், அண்டை மாநில விவசாயிகளுக்குச் செல்கிறது.
வலுக்கும் எதிர்பார்ப்பு (Strengthening anticipation)
எனவே இதனைக் கருத்தில் கொண்டாவது, தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சோயாப் புண்ணாக்கு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு மானியத்தில் விதை வழங்கி, சோயாப் புண்ணாக்கு உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!