விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று புகழடைந்த ரோபோ ஷங்கர் பின் வெள்ளித்திரையில் மாரி, வேலைக்காரன், இரும்புத்திரை இரவின் நிழல், கோப்ரா, என அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் ரோபோ ஷங்கர்.
தமிழ் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் சாலிகிராமத்தில் இருக்கும் தனது வீட்டில் இரண்டு அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் அதற்குரிய அனுமதியை பெற்றிருக்கவில்லை என கூறப்படுகிறது. இதை யாரோ அளித்த புகாரின் பேரில் தமிழக வனத்துறையினர் ரோபோ சங்கர் வீட்டை சோதனை செய்தனர்.
நடிகர் ரோபோ ஷங்கரின் ஹோம் டூர் வீடியோவை யூடியூப் சேனல் ஒன்றில் புகழ் மற்றும் பாலா ஆகியோர் வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரோபோ ஷங்கர் வீட்டில் பச்சை கிளிகள் வளர்ப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது.இது தொடர்பாக யாரோ அளித்த புகாரின் பேரில்
சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்த வனத்துறையினர் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்துவிட்டனர்.
வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தபொழுது, ரோபோ ஷங்கரும், அவரது மனைவியும் இலங்கையில் இருந்ததால், தொலைப்பேசியில் அவர் வனத்துறையினருக்கு விளக்கம் கொடுத்தார்.
அந்த விளக்கம், அலெக்சாண்டரியன் கிளி மனைவியின் தோழியுடையது என்றும், அவர் வெளிநாடு சென்று விட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த கிளியை வளர்த்து வருவதாகவும், அலெக்சாண்டரியன் வகை கிளியை வீட்டில் வளர்க்க அனுமதிவாங்க வேண்டும் என்பது தனக்கு தெரியாது என்றும், இதுகுறித்து, இலங்கையில் இருந்து வந்ததும் நேரில் வந்து விளக்கம் அளிப்பதாக ரோபோ சங்கர் கூறியிருந்தார்.
பின்னர், இலங்கையில் இருந்து திரும்பிவந்த ரோபோ ஷங்கர் வனத்துறையிடம் நேரில், விளக்கம் அளித்தார். ஆனால், ரோபோ ஷங்கரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத வனத்துறை, உரிய அனுமதி வாங்காமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததற்காக ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
யூடியூபில் பதிவிட்ட ஹோம் டூர் வீடியோவில் கிளிகள் தொடர்பாக தகவல் வெளியானதால் இது குறித்து வனத்துறைக்கு யாரோ புகாரளித்துள்ளனர். அதன்படியே தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கிளிகளின் சட்டவிரோத வர்த்தகம் - தெரிந்துகொள்ளுங்கள்
வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவு ஆகியவை பறவைகளுக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக இருந்தாலும், சட்டவிரோத வர்த்தகம் காரணமாக கிளிகள் கடுமையாக அச்சுறுத்தப்படுகின்றன.
உண்மையில், வனவிலங்கு வர்த்தகம் உயிரியல் பன்முகத்தன்மைக்கு இரண்டாவது மிக பயங்கரமான அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் சட்டவிரோத வர்த்தகத்தின் பாதிப்பை கிளிகள் எதிர்கொள்கின்றன. சர்வதேச பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதைத் தவிர, செல்லப்பிராணி வர்த்தகம் கிளிகளின் ஒட்டுமொத்த இனத்தொகையையும் அச்சுறுத்துகிறது.
1990-91 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் பறவை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை IV இல் கிளிகள் பாதுகாக்கப்படுகின்றன. சட்டத்தின்படி, இந்தப் பறவைகளை சிக்க வைக்கவோ, விற்கவோ அல்லது சிறைபிடிக்கவோ முடியாது. யாரேனும் அவற்றை விற்பதாகவோ அல்லது வர்த்தகம் செய்வதாகவோ புகார் அளிக்கப்பட்டால், அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மேலும் படிக்க
இனி அவ்வளவுதானா..Ola, Uber, Rapido நிறுவனங்களுக்கு செக் வைத்த டெல்லி அரசு
அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை -வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை