1. செய்திகள்

இனி அவ்வளவுதானா..Ola, Uber, Rapido நிறுவனங்களுக்கு செக் வைத்த டெல்லி அரசு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
ola, uber, rapido bike taxi services banned in delhi

Ola, Uber மற்றும் Rapido செயலியின் வழி இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லி போக்குவரத்துத் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகன நெரிசல் அதிகமுள்ள அனைத்து மாநகரிலும் Ola, Uber மற்றும் Rapido வின் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது செயலியின் வாயிலாக இருச்சக்கர, மூன்றுச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன டாக்ஸி சேவைகளை வழங்கி வருகிறது. இதனிடையே தான், டெல்லி போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

போக்குவரத்து அல்லாத (தனியார்) பதிவு முத்திரை/எண்களைக் கொண்ட இருச்சக்கர வாகனங்கள் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் வாகனங்களை வணிக டாக்ஸிகளாக பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ஐ மீறுவதாகும்.

எனவே Ola, Uber மற்றும் Rapido போன்ற அனைத்து வகையான நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மீறித் தொடர்ந்து பைக் டாக்ஸி சேவைகளை வழங்கினால் வாகன ஓட்டுநருக்கு முதல் முறை 5 ஆயிரம் ரூபாயும், 2 வது முறை 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இதனை மீறியும் தொடர்ந்து இயக்கினால் 3 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அண்மையில், மகாராஷ்டிராவில் ரேபிடோ சேவைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதனடிப்படையில், டெல்லி அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரு சக்கர வாகனம் மூலம் சேவை வழங்குவதில் உள்ள மற்றொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், எமர்ஜென்சி பட்டனுக்கான சரியான ஏற்பாடுகள் இல்லை. பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என கருதப்படுகிறது.

இதுபற்றி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஓட்டுனர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதே டாக்ஸி சேவைகள் என வரையறுக்கப்பட்டு உள்ளது. நான்கு சக்கர டாக்ஸிகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்கள் மட்டுமே இந்த அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றன. மோட்டார் சைக்கிள்கள் இந்த வரையறைக்குள் வராது. டாக்ஸி சேவைகளை இயக்க, குறிப்பிடத்தக்க நடைமுறைகள் உள்ளன. வாகனத்தில் பதிவு முத்திரை, மஞ்சள் நிற எண் தகடுகள், போலீஸ் சரிபார்ப்புக்குப் பிறகு வழங்கப்படும் PSV பேட்ஜ் போன்றவை அடங்கும் என்றார்.

இது தொடர்பாக தற்போது வரை Ola, Uber மற்றும் Rapido நிறுவனங்கள் தங்கள் தரப்பில் இன்னும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அதே சமயம், டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டு தனது டிவிட்டர் பக்கத்தில், "2W, 3W மற்றும் 4W-க்கான வாகன இயக்க கொள்கை அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. அப்பணி முடிந்ததும் கொள்கை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

English Summary: ola, uber, rapido bike taxi services banned in delhi Published on: 21 February 2023, 12:53 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.