1. Blogs

தமிழ் நாட்டின் நாட்டு மாடுகள் மற்றும் அதன் வகைகள்- ஓர் பார்வை

KJ Staff
KJ Staff
Kangeya Maadu
Native Cows of Tamil Nadu and their varieties

தமிழ்நாடு கலைகளுக்கும் பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடு, பாரம்பரியமாகவே பல ஆண்டுகளாக தமிழர்கள் நாட்டின மாடுகளை போற்றி பாதுகாத்து வருகின்றனர், இப்பகுதியில் நாம் தமிழ் நாட்டின் மாடுவகைகளை விரிவாக காண்போம்.

பிறப்பிடத்தின் பெயராலும் நிறத்தின் பெயராலும் மாடுகள் இங்கு வகைப்படுகின்றன சான்றாக காங்கேயம் என்ற ஊரை பிறப்பிடமாய் கொண்ட மாடு வகைகள் காங்கேயம் எனவும், புலிக்குளம் என்ற ஊரை பிறப்பிடமாய் கொண்ட காரணத்தினால் புலிகுளமாடுகள் எனவும் அழைக்க படுகின்றன, இவ்வகை மாடுகள் தமிழ் சங்க காலத்திலிருந்தே  தமிழ்நாட்டில் இருக்கின்றன அதை நாம் புறநானுறு எனும் நூலின் வழி  அறியலாம்.

சங்ககாலத்தின்  பேரரசுகளான சேர, சோழ, பாண்டிய, நாடுகளின் வழியும் மாட்டினங்கள்  வகைப்படுகின்றன.

  • சேர நாட்டை பிறப்பிடமாய் கொண்டவை காங்கேயம், பர்கூர், ஆலம்பாடி மாடுகளாகும்.
  • சோழ நாட்டை பிறப்பிடமாய் கொண்டவை வடகரை, மணப்பாறை, மற்றும் உம்பளாச்சேரி மாடுகள் ஆகும்.
  • இருச்சாளி, புலிக்குளம் ஆகிய மாடுவகைகள் பாண்டிய நாட்டை பிறப்பிடமாய் கொண்டவைகள் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் நாட்டின் மாடுகள் பெரும்பாலாகவே மிக அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டனவாகவும், உழவு வேளைகளில் சிறந்தனவாகவும் இருக்கின்றன, இவை வடநாட்டு மாட்டினங்கள் போல மிகுதியாக பால் தரவில்லலை என்றாலும் அன்றாட வீட்டுத்தேவைகளுக்கு போதுமானதாகவும் அதிக சத்துக்கள் நிறைந்தனவாகவும் உள்ளது.

வகைகள்;

1)காங்கேயம்

இவைகள் கொங்குநாடு மாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன, இவைகள் காங்கேயம், தாராபுரம்பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் இதைசுற்றிய பகுதிகளை பிறப்பிடமாய் கொண்டவை, பெரும்பாலான மாடுகள் கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன, இவைகள் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டவைகளாகவும், அதிக உடலாற்றல் உள்ளனவாகவும் இருக்கின்றன. இவ்வகை பசுமாடுகள் 2-3 லிட்டர்கள் பால்தருபவைகளாகும்.

2)பர்கூர்

இவைகள் ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலைகளை பிறப்பிடமாக கொண்டவை, இவ்வகை மாடுகள் சிவப்பு நிறத்தில் வெள்ளை புள்ளிகள் கொண்டுள்ளன. சமநிலையில்லா விளைநிலங்களில் விவசாய வேலைகள் செய்வதற்காக பழக்க படுகின்றன, இவைகள் அதிக செயற்திறன் படைத்தவைகளாய் இருக்கின்றன. பால் உற்பத்தி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

3)புலிக்குளம்

இவ்வகை மாடுகள் சிவகங்கை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை பிறப்பிடமாய் கொண்டவை, இவைகள் காட்டுமாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், கிடை மாடுகள் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது, இவைகள் மிகவும் சீற்றம் கொண்டவைகளாக உள்ளன. பொதுவாக இவற்றை கருப்பு, சிவப்பு வெள்ளை நிறங்களில் காணலாம், இவை கிடைகளாக வளர்க்க படுகின்றன, தமிநாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் மிகுதியாக வளம் வருகின்றன, அதிக உழைப்புத்திறன் கொண்டவை, பால் உற்பத்தி மிகக்குறைவு.

4)உம்பளச்சேரி

இவ்வகை மாடுகள் தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினத்தை பிறப்பிடமாக கொண்டவை, இவை மொட்டை மாடு, தெற்கத்தி மாடு என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இவ்வகை  மாடுகள் மிகவும் ஆற்றல் கொண்டவைகளாகவும் உள்ளன. கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. நெற்றி, வால் மற்றும் தாடை பகுதிகள் வெள்ளை நிறமாக உள்ளன.

மேலும் படிக்க:

நாட்டு மாடு பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மானியம்!

அரசு மானியத்தில் கால்நடை தொழில்கள்! லட்சத்தில் சம்பாதிக்க ஐடியாக்கள்!!

English Summary: Native Cows of Tamil Nadu and their varieties - An overview Published on: 26 December 2022, 02:56 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.