இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 November, 2022 1:46 PM IST

குஜராத்தில் பாகல்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த முதியவரின் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு அறுவை சிசிச்சை செய்து, வயிற்றில் இருந்த நாணயங்களை மருத்துவர்கள் அகற்றினர். இதில் ஒரு கிலோ எடையிலான நாணயங்கள் அகற்றப்பட்டன.

60 வயது

குஜராத் மாதிநலம் பாகல்கோட்டையின் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். 60 வயதான இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த திம்மப்பா தினமும் மதுகுடித்து வந்தார்.
இந்த நிலையில் திம்மப்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் நாணயங்களை விழுங்கி வந்ததாக தெரிகிறது.

உடல் நலக்குறைவு

இந்த நிலையில் திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது திம்மப்பாவின் வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நாணயங்களை அகற்றாவிட்டால் திம்மப்பா உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இதையடுத்து திம்மப்பா பாகல்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி திம்மப்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அகற்றினர். அந்த நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது.

திம்மப்பாவின் வயிற்றில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் 56-ம், 2 ரூபாய் நாணயங்கள் 51-ம், 1 ரூபாய் நாணயங்கள் 80-ம் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: Coin for hunger, wine for thirst - Grandpa's miracle!
Published on: 28 November 2022, 01:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now