நியூசிலாந்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அதிக காட்டுப் பூனைகளை கொன்றால் பரிசு வழங்கப்பட்டும் என போட்டிக்குழு அறிவித்த நிலையில், அந்நாட்டு விலங்குகள் வதை தடுப்பு சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்த போட்டியை ரத்து செய்வதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் ஆண்டுதோறும் காட்டுப் பூனைகளை வேட்டையாடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு போட்டியில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பங்கேற்று காட்டுப் பூனைகளைக் கொல்லலாம் என தெரிவித்த நிலையில், பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியதும் போட்டி ஏற்பாட்டாளர்கள் பின்வாங்கி உள்ளனர்.
நியூசிலாந்தில், காட்டுப் பூனைகள் ஒரு கொடிய மிருகமாக கருதப்படுகின்றன. இதனால் நாட்டின் உயிரியல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுகிறது. நியூசிலாந்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் வேட்டையாடுவது பிரபலமான ஒன்று. தென் தீவில் உள்ள வடக்கு கேன்டர்பரியில் உள்ள உள்ளூர் பள்ளிக்கு ஜூன் மாதம் நிதி திரட்டும் செயலின் ஒரு பகுதியாக இந்த போட்டி அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போட்டியில், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் காட்டுப் பன்றிகள், மான்கள் மற்றும் முயல்களைக் கொல்ல போட்டியிடுகின்றனர்.
ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாத இறுதிக்குள் அதிக காட்டுப்பூனைகளை வேட்டையாடும் குழந்தைகளுக்கு பரிசுத்தொகையாக NZ $250 அறிவிக்கப்பட்டது. கிடைத்துள்ள தகவலின் படி, 14 வயதுக்குட்பட்டவர்கள் காட்டு பூனைகளை வேட்டையாட வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர். அதை நேரத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளைக் கொல்ல வேண்டாம் என்று இளைஞர்களிடம் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. பரிசுக்காக முடிந்தவரை பல காட்டுப் பூனைகளைக் கொல்லுமாறு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு விலங்குகள் நலக் குழுக்களிடமிருந்து கண்டனத்தைப் பெற்றது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நியூசிலாந்தின் பிராணிகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சங்கத்தின் பிரதிநிதி கூறுகையில், பரிசுக்காக பூனைகள் கொல்லப்படுவது காட்டுமிராண்டித் தனமான செயல். வீட்டுபூனைகள், காட்டுப்பூனைகள் என்கிற வேறுபாடு இன்றி பரிசுக்காக வீட்டின் வளர்ப்பு பூனைகளும் தற்செயலாக கொல்லப்படும் என்ற அச்சம் இருந்தது” என்றார்.
"நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு விலங்குகள் மீது அனுதாபிமானத்தை கற்பிக்க நினைக்கிறோம். அவற்றைக் கொல்வதற்கான கருவிகளை அவர்களிடம் ஒப்படைக்கக்கூடாது," என்று விலங்கு நல தொண்டு நிறுவனமான சேப்பின் தெரிவித்துள்ளார்.
நார்த் கேன்டர்பரி வேட்டை போட்டியின் அமைப்பாளர்கள் பூனை கொல்லும் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். தங்களுக்கு "மோசமான மற்றும் பொருத்தமற்ற மின்னஞ்சல்கள்" தொடர்ந்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
"நாட்டின் பூர்வீக பறவைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களைப் பாதுகாப்பதில் ஈடுபடும் நபர்களின் உணர்வுகளை மதிக்கின்றோம். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று போட்டிக்குழுவினர் தங்களது பேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.
pic courtesy- gettyimages /krishijagran
மேலும் காண்க:
63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அடிக்கல்- எந்தெந்த மாவட்டத்தில் வரப்போகிறது?