1. செய்திகள்

63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அடிக்கல்- எந்தெந்த மாவட்டத்தில் வரப்போகிறது?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
CM M.K.Stalin laid the foundation stone for 63 direct paddy procurement stations

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.95.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் ஒரு வட்ட செயல்முறைக் கிடங்கினை திறந்து வைத்து, 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் 750 மெட்ரிக் டன் கொள்ளளவில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கினையும் திறந்து வைத்தார். மேலும், 39 கோடியே 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 மாவட்டங்களில் கட்டப்படவுள்ள 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

84 நவீன நெல் சேமிப்பு தளங்கள்-வட்ட செயல்முறைக் கிடங்கு:

தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களின் பதினெட்டு இடங்களில் மொத்தம் 2,86,350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் மொத்தம் 238 கோடியே 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதற்கட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 105 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள 106 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் முதல்வரால் கடந்த 11.02.2023 அன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக தற்போது அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், புதுக்காடு கிராமத்தில் 750 மெட்ரிக் டன் கொள்ளளவில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கினையும் இன்று முதல்வர் திறந்து வைத்தார்.

63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்:

விவசாயிகளின் விலை பொருளான நெல்லினை அரசு நிலையங்கள் மூலம் விரைந்து கொள்முதல் செய்திட ஏதுவாக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 மெட்ரிக் டன் நெல்லினை சேமித்து வைத்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 நிலையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 10 நிலையங்கள், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 7 நிலையங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 நிலையங்கள், புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 3 நிலையங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 நிலையங்கள், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 1 நிலையம், என மொத்தம் 10 மாவட்டங்களில் 39 கோடியே 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

pic courtesy : TNDIPR

மேலும் காண்க:

அடிக்கிற வெயிலிலும் தோட்டம் பூத்து குலுங்கணுமா? இந்த பூக்களை வளருங்க

English Summary: CM M.K.Stalin laid the foundation stone for 63 direct paddy procurement stations Published on: 25 April 2023, 02:00 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.