ஊரடங்கு தளர்வினால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் ஒயின் பாட்டில்களின் மூடியை எலிகள் சேதப்படுத்தி, ஒயினை எலிகள் குடித்துச் சென்ற சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது.
ஊரடங்கு (Curfew)
இதையடுத்து வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க ஏதுவாக, மே 10ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து வைரஸ் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்த நிலையில் தொடர்ச்சியாகத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் தளர்வுகள் (Additional relaxations)
அந்த வகையில் ஜூலை 12ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறப்பு (Tasmac opening)
தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
அதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியாநந்தன் ஆகியோர் திறந்தனர்.
ஒயின் காலி (The wine is empty)
அப்போது, கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடியை சேதப்படுத்தப்பட்டிருப்பதுடன், அதிலிருந்த ஒயின் காலியாக இருப்பதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.1,900 (Rs.1,900)
தொடர்ந்து நடத்திய ஆய்வில், எலிகள் பாட்டில்களைக் கீழேத் தள்ளி, மூடிகளைச் சேதப்படுத்தி அதிலிருந்த ஒயினைக் குடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1,900 ஆகும். இச்சம்பவம், ஊழியர்கள் மட்டுமின்றி குடிமகன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!
டீசல் விலை உயர்வு: 3 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டியது!
புதிய மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ள ஊர்கள்! விரைவில் அறிவிப்பு