உலகளவில் அதிகளவில் தேன் உற்பத்தியாகும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா தான். நமது இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக விளங்குகிறது.
தேனீக்களின் சிறப்பு மற்றும் அதனை வளர்க்க அரசின் சார்பில் வழங்கப்படும் பயிற்சி, மானியம் குறித்து வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் தனது கருத்துகளை கிரிஷி ஜாக்ரான் இணையத்தளத்துடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
தேனீக்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள்:
தேனீக்கள் கூட்டமாக வாழும். ஓவ்வொரு கூட்டிலும் 30000 முதல் 40000 வரை இருக்கும். தேன்கூட்டில் இராணிதேனீ ஓன்றும், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள், ஆண் தேனீக்கள் உள்ளன இவை ஓரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் வாழந்து தேனை சேகரிக்கின்றன.
தேனீக்களில் சுமார் 30000 வகைகள் இருந்தாலும்கூட 7 முதல் 12 வரையிலான வகைகள் மட்டுமே தேனை உற்பத்தி செய்கின்றன. அதில் மலைத்தேனீ,கொம்புத் தேனீ,அடுக்கு தேனீ ,கொசுத்தேனீ, இத்தாலிய தேனீக்கள் போன்ற வகைகள் முக்கியமானவை.
பூக்களில் இருக்கும் தேனைச் சேகரித்து வரும் தேனீக்கள் அதை தேன் கூட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. என்ன வகையான பூக்களில் இருந்து தேன் எடுக்கப்படுகிறது என்பதை பொருத்து தேனின் சுவை மாறுபடும். 450 கிராம் அளவுக்கு தேன் தயாரிக்க தேனீக்கள் 20 லட்சம் பூக்களில் இருந்து தேனை எடுத்து வரவேண்டும்.அதற்காக 88 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்க வேண்டும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், அதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறது தேனீக்கள். ஓரு தேன்கூட்டில் ஓரு ஆண்டுக்கு 13 முதல் 45 கிலோகிராம் வரை தேனை தயாரிக்க தேனீக்களால் முடியும்.
100 கிராம் தேனில் உள்ள சத்துகள் விவரம்:
எனர்ஜி 2.88, கலோரி கார்போஹைட்ரேட் 83 கிராம், பிரக்டோஸ் 38 கிராம், குளுக்கோஸ் 36 கிராம், புரதம் 0.3 கிராம், தண்ணீர் 17 மி.கி.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீக்களின் சிறப்பை உலகிற்கு உணர்த்திட கனடா நாட்டின் " ஃபெல்ஹர்" நகரில் தேனீக்களுக்கு மிகப்பிரமாண்டான சிலை வைக்கப்பட்டுள்ளது. 1990-யில் உருவாக்கப்பட்ட சிலை 23அடி நீளம் கொண்டது. இந்த நகரத்தை தேன் நகர் என்றும் (HONEY CAPITAL OF CANADA)அழைக்கப்படுகின்றது. மருத்துவ குணமுள்ள தேன் பல ஆண்டுகளாக கெட்டுபோவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இது ஓரு லாபகரமான தொழிலாக விவசாயிகளுக்கு உள்ளது. இதற்கான பயிற்சியை வேளாண்துறையும் வேளாண்மை அறிவியல் மையமும் அந்த அந்த பகுதியில் வழங்கி வருகின்றன. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக இருவிதமான பயிற்சி வழங்கப்படுகிறது.
1) இலவச பயிற்சி- சிறு/ குறு விவசாயிகளுக்கு ஓருவாரம் இலவசமாக பயிற்சி ஆண்டுக்கு 2- 3வீதம் வழங்கப்படுகின்றன. (பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பொருத்து).
2.) கட்டணத்துடன் பயிற்சி- இந்த பயிற்சியானது பிரதி மாதம் 6-ந்தேதி 150 ரூபாய் கட்டணத்துடன் வழங்கப்படுகின்றன. இதுபோல அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையம் (KVK) மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் வேளாண்துறை முலமாக " ஆட்மா" திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பயிற்சியும், தோட்டக்கலை துறை முலமாக தேனீப் பெட்டி (தேனீக்கள் காலனியுடன்) வாங்கிட 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும் தேனீ வளர்ப்பு, அரசு வழங்கும் பயிற்சி மற்றும் மானியம் குறித்த கேள்விகளுக்கு வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289
மேலும் காண்க:
தக்காளியை பதுக்கினால் அம்புட்டுதான்- அமைச்சர் கடும் எச்சரிக்கை