ஓய்வு காலம் என்பது நமக்கு நிதிச்சுமை இல்லாததாக, நிம்மதியானதாக அமையவேண்டும். நாம் அரசு ஊழியர்களாக இருந்தால், இது நிச்சயம் கிடைத்துவிடும். ஆனால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் எதிர்காலம் கருதி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பு பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு முடிவு (Union Government decision)
இந்தத் திட்டத்தின்படி ஏற்கனவே மாதம் ரூ.1,000 பென்சனாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை இருமடங்காக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பின் உறுப்பினர்களுக்கு பென்சன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்சன் வழங்கப்படுகிறது. இப்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
வலுக்கும் கோரிக்கை (Request for strengthening)
குறைந்தபட்சம் 1000 ரூபாய் பென்சன் என்பது போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதை உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் பிஎஃப் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்புக்காக, பிஎஃப் உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர்.
அடிப்படை சம்பளம் (Basic salary)
ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் என்ற அடிப்படையில்தான் பென்சன் தொகை கணக்கிடப்படுகிறது. இந்த வரம்பை உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு தீர்ப்பு கிடைத்தால் பென்சன் பணம் ரூ.8500 ரூபாய்க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில்
குறைந்தபட்ச பென்சன் மட்டுமல்லாமல், அடிப்படை சம்பளம் தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பு உள்ளது.
ரூ.21,000
ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்சன் தொகை 15000 ரூபாயிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் ஒருவேளை 21,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும். எனவே விரைவில் சம்பள வரம்பு 21,000 ரூபாயாக உயர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க...
வருடத்திற்கு 3 சிலிண்டர்கள்- இனி இலவசமாகக் கிடைக்கும்!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!