மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 6:20 AM IST

பணத்துக்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது ஒரு நிதிச் சேவை நிறுவனம். இந்த முடிவு பெண் ஊழியர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒருபுறம், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட நெருக்கடி மறுபுறம் என தனியார் நிறுவனங்கள் பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளன. இதனால், வேலைக்குப்போனால், சம்பளம் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நிதிச்சுமையில் பல நிறுவனங்கள் சிக்கியிருக்கின்றன.

இந்த நேரத்தில் மாற்றி யோசித்திருக்கிறது இந்த நிதி நிறுவனம். அதாவது ஊழியர்கள் பணவீக்கத்தை எதிர்கொள்வதற்காக பணத்துக்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் வழங்க ஒரு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நிதி நிறுவனம் (Financial institution)

லண்டனை சேர்ந்த நிதிச் சேவைகள் நிறுவனமான டேலிமணி (TallyMoney) நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேமரான் பாரி தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளார். இது அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் வியப்பான விஷயமாகவே மாறியிருக்கிறது.
டேலிமணி நிறுவனத்தில் சுமார் 20 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். எனவே, சோதனை அடிப்படையில் தங்கத்தில் சம்பளம் கொடுத்து பார்க்கலாம் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேமரான் பாரி தடாலடியாக முடிவெடுத்துவிட்டார்.

விரும்பினால் தங்கம் (Wish)

இதன்படி, விருப்பப்பட்ட ஊழியர்கள் இனி பணத்துக்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் என டேலிமணி நிறுவனம் அறிவித்துள்ளது.
சொல்லப்போனால், பணத்தை விட தங்கத்தில் சம்பளம் கொடுப்பதுதான் நியாயமாக தெரிகிறது என்கிறார் கேமரான் பாரி.

ஆயுதம்

பணவீக்கத்தால் விலைவாசியும், செலவுகளும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண பணத்தில் சம்பள உயர்வு வழங்குவதே நியாயமில்லை எனவும், காலம் காலமாக பணவீக்கத்தை எதிர்கொள்ளும் ஆயுதமாக தங்கம் பயன்படுவதால் தங்கத்தில் சம்பளம் கொடுப்பதே சரி என்று கேமரான் கூறுகிறார்.

மேலும் படிக்க...

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

 

English Summary: Gold as Salary - Sudden decision
Published on: 16 May 2022, 06:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now