Blogs

Sunday, 20 June 2021 10:45 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக, உதகையில் உள்ள ஒரு கிராமத்தில், பழங்குடியின மக்கள் பூசணிக்காய்களைக் கிருமி நாசினியாகப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோப்பு நிறுவனங்களுக்கும் (For soap companies)

அவர்கள் தங்கள் தேவைக்குப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

சானிடைசர் விற்பனை (Sanitizer sales)

உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கிருமி நாசினி எனப்படும் சானிட்டைசர் கைகொடுக்கும் என அறிவிக்கப்பட்டது முதல், இதன் விற்பனைதான் அதிரடியாக நடந்தவருகிறது.

குறிப்பாக கடந்த 2 வருடங்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் விற்பனையானது எது தெரியுமா? அதுதான் சானிடைசர்.

பூசணிக்காய் (pumpkin)

ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா தொற்றில் இருந்துப் பாதுகாத்து கொள்ள கைகளை கழுவுவதற்கு சோப்பு, கிருமி நாசினிக்கு பதிலாக பூசணிக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

புதுக்காடு கிராமம் (Pudukkadu village)

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ளது புதுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார். தற்போது கொரோனாத் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிருமி நாசினிக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் (Corona virus)

அந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசணிக்காய்களைச் சேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனாத் தொற்றுக் காலத்தில் அடிக்கடி கைகழுவுவதற்குச் சோப்புக்குப் பதிலாகப் பூசணிக்காய்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

சோப்பு நிறுவனங்கள் (Soap companies)

மேலும் இந்த பூசணிக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளிப் பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் பழங்குடியின மாணவர்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் வனப்பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

வேதிப்பொருள் (Chemical)

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், வனங்களில் கிடைக்கும் சோப்புக்காய் என அழைக்கப்படும் பூசக்காயை நசுக்கினால் அதில் உள்ள வேதிப்பொருள் நுரைபோல் வெளிவரும்.

கிருமி நாசினி (Destroys germs)

அது கிருமிகளை அழிக்கக்கூடியது. சோப்பு நிறுவனங்களே இந்தக் காயை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள்! தெரிஞ்சிக்கலாம் வாங்க

தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)