செல்லப்பிராணிகள் எப்போதுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதுடன், உடன் தோழனாகவும் மாறிவிடுகின்றன. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, நம் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்க் குட்டிகள்தான்.அவற்றைப் பார்க்கும்போது, பலருக்கு அச்சம் துளிர்விட்டாலும், எஜமானர்களுக்கு எப்போதுமே பாசம் மட்டுமே வெளிப்படுகிறது.
செலவு அதிகம்
இவற்றின் பராமரிப்பு செலவு அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவற்றின் விலை லட்சங்களில் என்றால் நம்ப முடிகிறதா?
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் உண்மை அதுதான்.
இன நாய்க்கும் ஒவ்வொரு விலை இருக்கும். அவை தனக்கென தனி குணாதிசயத்துடன் இருக்கும். சில நாய்கள் மூர்க்கமாக ஆக்ரோஷத்துடன் காணப்படும் சில நாய்கள் அமைதியாக இருக்கும். இதனால் நாய்களுக்கான விலையும் மாறுபடும்.
புல் டாக்
அரிய வகை இன நாய்கள் அதிக விலையிலும் அதிகம் உள்ள இன நாய்கள் குறைந்த விலையிலும் மார்க்கெட்டில் விற்பனையாகிறது.அப்படி, முடியில்லாத புல்டாக் என்ற இனத்தின் நாய் குட்டி ரூ40 லட்சத்திற்கு விற்பனையாகிறதாம்.
ஏனெனில், இது புல் டாக் எனப்படும் இனத்தில் சற்று மாறுபாடு செய்யப்பட்டு, முடியே இல்லாத புல் டாக் இன நாய் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இந்த நாய் குட்டி மார்கெட்டில் ரூ40 லட்சம் வரை விற்பனையாகிறதாம்.
இப்படியாக மரபணு மாறுபாடு செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும் பல நாடுகளில் இந்த மரபணு மாற்றப்பட்ட நாய்கள் தயார் செய்யப்படுகிறது. ரூ40 லட்சத்திற்கு நாய் குட்டி விற்பனையாவது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!