1. வாழ்வும் நலமும்

வெந்நீரில் 10 நிமிடம் ஊறிய வெந்தயம்- Sugar Control நிச்சயம் சாத்தியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dill soaked in hot water for 10 minutes- Sugar Control possible!

40 வயதைக் கடக்கும்போதே, பிரஷரும், சுகரும் நம்மைப் பதம்பார்க்கத் தொடங்கிவிடுகின்றன. ஐயோ நோய் வந்துவிட்டதே எனக் கவலையில் மனதைக் குழப்பாமல், வந்த நோயில் இருந்து விடுபடுவது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதே சிறந்தது.

அவ்வாறு சர்க்கரை நோயாளிகள், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடால் நீரிழிவு 2வது வகை நோயைக் கட்டுப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஏனெனில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெந்தயம் செரிமானத்தை எளிதாக்க உதவும் நார்ச்சத்தைத் தன்னத்தேக் கொண்டுள்ளது.

வெந்தய இலைகள் ஒரு சுவையான உணவைத் தயாரிக்கப் பயன்படும் அதே வேளையில், அதனுடைய மஞ்சள் நிற பழுப்பு வெந்தயத்தில் சர்க்கரை நோய், செரிமானக் கோளாறுகள், எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தின் மூலம் சிறந்த பலன்களைப் பெற, வெந்தயத்தை எந்த நேரத்தில் எப்படி சாப்பிட வெண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வெந்தயம் சாப்பிடும்போது அதன் சுவை கடினமாக இருந்தால், காய் கறிகள், பருப்பு அல்லது பிற உணவு தயாரிப்புகளில் சேர்த்தும்கூட சாப்பிடலாம்.
வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தினமும் 10 கிராம் வெந்தயத்தை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், 2வது வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் திறன் வெந்தயத் தண்ணீருக்கு இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்முறை

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து சுமார் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி சூடாக தேநீரைப்போல அருந்தலாம்.

மருத்துவ நன்மைகள் (Medicinal benefits)

  • வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து அல்லது பொதுவாக வெந்தயத் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

  • அதுமட்டுமல்லாமல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், அமில வீச்சு அல்லது நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றைச் சமாளிக்கவும் உதவுகிறது.

  • வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிடுவது நம் உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் தடுக்கும்.

  • வெந்தயம் பிரசவம் மற்றும் கருப்பை சுருக்கத்தை தூண்டுகிறது.

தகவல்
ரிங்கி குமாரி
உணவியல் நிபுணர்

மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

English Summary: Dill soaked in hot water for 10 minutes- Sugar Control possible! Published on: 19 April 2022, 08:42 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.