Blogs

Thursday, 23 June 2022 10:35 PM , by: Elavarse Sivakumar

நம்மூரில், சில சமையங்களில் எலுமிச்சைப்பழம் ஆயிரக்கணக்கில் ஏலம் போவது போல, அசாமில் மிக அரிய ரக டீ கிலோவுக்கு 1 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

காலை எழுந்தவுடன் சுறுசுறுப்புக்காக,டீ குடிக்காத மக்களைக் காண்பது மிகவும் அரிது. ஏன்,இந்தியாவின் தேசிய பானம் டீ என கூறும் அளவுக்கு இந்திய மக்களின் வாழ்வில் டீ ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கலந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ரூ.1 லட்சம்

ஊட்டி டீ, அசாம் டீ, டார்ஜிலிங் டீ என பல வகையான டீ இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில், அசாமில் உற்பத்தி செய்யப்படும் அரிய ரக டீ ஒரு கிலோ 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

கோலகாட் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பபோஜன் கோல்டு டீ (Pabhojan Gold Tea) என்ற அரிய வகை டீ, தயார் செய்யும்போது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் சுவையான டீ கிடைக்கும். இது அரிய ரக டீ என்பதால் டிமாண்ட் அதிகம். ஆகவே இதன் விலையும் மிக அதிகம். இந்நிலையில், அசாமில் ஜோர்ஹாட் டீ ஏல மையத்தில் பபோஜன் ஆர்கானிக் டீ எஸ்டேட்டால் பபோஜன் கோல்டு டீ ஏலம் விடப்பட்டது.

புதிய அனுபவம்

அப்போது, பபோஜன் கோல்டு டீ கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை அசாமை சேர்ந்த பிரபல டீ பிராண்டான எஸா நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முடியும் என எஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்?

10 நிமிடத்தில் மது டெலிவரி- குடிமகன்களுக்கு குஷி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)