டிராக்டர் கடன் கிடைக்காத சோகத்தில், இறந்த விவசாயிக்குக் கடன் வழங்கியதாக வங்கி நிர்வாகம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டிராக்டர் கடன் (Tractor loan)
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல் பேட்டை தாலுகா எரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா. விவசாயியான இவர் கடந்த 2010ம் ஆண்டு டிராக்டர் வாங்குவதற்காக குண்டல் பேட்டையில் உள்ள வங்கியில் விண்ணப்பித்திருந்தார்.
டிராக்டர் நிறுவனம் மோசடி (Tractor company fraud)
இதையடுத்து இந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்க ரூ. 16.12 லட்சத்திற்கான காசோலையை வங்கி நிர்வாகம், அப்பகுதியைச் சேர்ந்த டிராக்டர் நிறுவனத்திற்கு அனுப்பியது.
ஆனால் அந்தக் காசோலையை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம், டிராக்டரை மல்லப்பாவிற்கு வழங்கவில்லை.
மல்லப்பா மரணம் (Mallappa's death)
இதனால் டிராக்டர் வாங்க வங்கியில் விண்ணப்பித்தும், வங்கியிலிருந்து தனக்கு கடன் வழங்கவில்லை என்று எண்ணி மல்லப்பா வேதனையில் ஆழ்ந்தார். சில தினங்களில் எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிட்டார்.
வங்கி நோட்டீஸ் (Bank Notice)
தற்போது டிராக்டர் வாங்குவதற்காக, வங்கியில் வாங்கியக் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு, மல்லப்பாவின்மகன் மகேஷிற்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.
தன் தந்தை இதுவரை டிராக வழங்கப்படாத நிலையில், வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததால், அதிர்ச்சியடைந்த மகேஷ், இதுகுறித்து மாவட்ட விவசாய சங்கத்தில் புகார் அளித்தார்.
மோசடி அம்பலமானது (Fraud exposed)
மாவட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் வங்கியில் சென்று விசாரித்த போது, மல்லப்பாவிற்கு டிராக்டர் வழங்க தனியார் டிராக்டர் ஷோரூமிற்கு காசோலை அனுப்பியதும், அந்நிறுவனத்தில் டிராக்டர் வழங்காமல் மோசடி செய்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
புதிய டிராக்டர் மூலம் சமாதானம் (new tractor)
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதா, மகேஷ் கூறியநிலையில், அவருடன் வங்கி தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில், ரூ.2 லட்சத்திற்கான காசோலையுடன், ஒரு புதிய டிராக்டரையும் வழங்கி சமாதானம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க...
ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை
இயற்கையான கல் உப்பை பயன்படுத்துவோம்! உடல்நலம் காப்போம்!