1. வாழ்வும் நலமும்

இயற்கையான கல் உப்பை பயன்படுத்துவோம்! உடல்நலம் காப்போம்!

KJ Staff
KJ Staff
Salt
Credit : Tamil Samayam

கல் உப்பின் பயன்பாடு குறைந்ததும், தைராய்டு கோளாறு அதிகரிக்க துவங்கி விட்டது. இயற்கையாக கிடைக்கும் உப்பு, பழுப்பு நிறத்தில் சற்றே அழுக்கடைந்து இருக்கும்; அது தான், அயோடின் (Iodine) நிறைந்த உப்பு. வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பதற்காக, வேதிப் பொருட்களைச் சேர்த்து, உப்பை சுத்திகரிக்கும் போது, அதில் இயல்பாக உள்ள அயோடின் சத்து அழிந்து விடுகிறது. அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பை தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசின் விதியால், அயோடின் சேர்த்து விற்கின்றனர். என்ன தான், செயற்கையாக அயோடின் சேர்த்தாலும், இயற்கையான உப்பில் (Salt) உள்ள அயோடினுக்கு இணையாக முடியாது.

ஹார்மோன் செயல்பாடு பாதிப்பு:

கடலில் உற்பத்தி ஆகும் மீன்களிலும் அயோடின் அதிகம் உள்ளது. கடல் நீரில் தொழிற்சாலை கழிவுகளை சேர்த்து, மாசடைந்து விட்டதால், அவற்றை சாப்பிடும் மீன்களிலும், இயற்கையாக கிடைக்கும் அயோடின் இருப்பதில்லை. அயோடின் சத்து நிறைந்த பச்சை காய்கறிகளிலும், செயற்கை உர பயன்பாடு, பறித்த பல மணி நேரங்களுக்கு வாடாமல் இருக்க, ரசாயன உரங்களை தெளிப்பதால், இயற்கையான சத்துக்கள் அழிந்து விடுகின்றன. தினமும் கடலில் இருந்து கிடைக்கும் மீன்களை (Fish) பயன்படுத்தாமல், பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, வியாபாரிகள், வேதிப் பொருட்களைச் சேர்த்து, 'பிரீசரில் (Freezer)' பதப்படுத்தி வைக்கின்றனர். செயற்கை உரங்கள், இரசாயன கலவை அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்ந்தால், ஹார்மோன் (Hormone) செயல்பாடு இயல்பாகவே பாதிக்கப்படும் என்பது தான், அறிவியல் பூர்வமான உண்மை!

ஹார்மோன் மாத்திரை

அயோடின் குறைபாடு இருந்தால், தனிப்பட்ட நபரின் உடல் தேவையைப் பொறுத்து, பல ஆண்டுகள் ஹார்மோன் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும்; இதனால், எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு, சில ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்ட பின், ஹார்மோன் அளவு சீராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மாத்திரையை நிறுத்தி விடலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதித்து, தேவையெனில் மீண்டும் சாப்பிட ஆரம்பிக்கலாம். 'சல்பர் (Sulfur)' சேர்த்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையில், எறும்பு, பூச்சி எதுவும் வருவதில்லை. அரிசி, பருப்பு, சர்க்கரை என்று எந்தப் பொருளில், 15 நாட்களில் பூச்சி வருவதில்லையோ, அவை வேதிப் பொருட்கள் நிறைந்த, சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் தேவகி
பொது நல மருத்துவர், சென்னை.
doctordevaki@gmail.com

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டகாசமான டையட் லோ கிளைசெமிக்!

English Summary: Let's use natural rock salt! Let's stay healthy! Published on: 20 March 2021, 05:46 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.